ரங்கநாதனை காண வந்த மோடி.. திரண்ட ஸ்ரீரங்கம்.. கார் கதவை திறந்து நின்றபடி.. திருச்சியில் "அந்த" குரல்
சென்னை: ஸ்ரீரங்கத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் மோடிக்கு, பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.. சாலையெங்கும் பாஜகவினர் திரண்டு, மலர்தூவி பிரதமரை வாழ்த்தி வரவேற்றனர்.
உத்தரபிரதேச அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கடந்த 12-ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலும்; திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களாக திகழ்கின்றன. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார்..
இதற்காக ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரங்கநாதரை தரிசிக்க இன்று காலை 8:30 மணிக்கு திருச்சிக்கு தனி விமானத்தில் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. 11:00 மணிக்கு காரில், சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி, தாயார், ரெங்கநாதர் மற்றும் அங்குள்ள சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். அதேபோல, ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள யானையிடம் பிரதமர் ஆசி பெற்றார்.
சன்னதிகள்: கருடாழ்வார், மூலவர் சன்னதிகளில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். மேலும் தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் சன்னதிகளிலும்சாமி தரிசனம் செய்கிறார். கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்பராமாயண பாராயணத்தை கேட்கிறார்.
முன்னதாக ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த பிரதமருக்கு, ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்... கோயிலுக்கு செல்லும் வழியில், பிரதமரை வரவேற்க பலரும் திரண்டிருந்தனர்.. பிரதமரை பார்த்ததுமே, மலர்களை தூவி வாழ்த்தி வரவேற்றனர்.. மேலும், கோஷங்களையும் எழுப்பியவாறே இருந்தனர்.. "மோடி ஜி வாழ்க" என்ற குரல், ஸ்ரீரங்கம் முழுவதுமே எதிரொலித்தது.
கார் கதவு: அதேபோல, சாலை வழியாக ரங்கநாதர் கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, அனைவரையும் காண வேண்டும் என்ற ஆவலில் காரின் கதவை திறந்து நின்றபடியே சென்றார் பிரதமர்.. வழியெங்கும் திரண்டு வந்திருந்தவர்களை பார்த்து கையசைத்து சென்றார்..!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications