உன் டிரெஸ்தான் காரணம்.. பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவியிடம் சொன்ன எஸ்ஆர்எம் வார்டன்!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவி கொடுத்த புகாரை பெண்கள் விடுதி வார்டன் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு படிக்கும் மாணவி ஒருவர் பெண்கள் விடுதியின் லிப்டில் செல்லும் போது, பணியாளர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி உள்ளார்.
லிப்டில் இருந்த பணியாளர் அந்த பெண்ணிடம் தன்னுடைய ஆடைகளை அவிழ்த்து தவறாக நடந்து கொள்ள முயன்று இருக்கிறார். இதனால் கத்தி கூச்சலிட்ட பின் லிப்டை நிறுத்தி வேகமாக வெளியே ஓடியுள்ளார். பின் இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தார்.

மாணவர்கள் குற்றச்சாட்டு
அந்த பணியாளருக்கு ஆதரவாக கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். அதாவது அந்த தனிப்பட்ட பணியாளரை காப்பாற்றவே கல்லூரி நிர்வாகம் முயல்கிறது என்றுள்ளனர். அதனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

மோசமான கருத்து
இந்த நிலையில் அந்த மாணவி தவறான உடை அணிந்து இருந்த காரணத்தால்தான் இப்படி நடந்தது என்று அந்த கல்லூரி வார்டன் தெரிவித்து இருக்கிறார். புகார் அளிக்க வந்த மாணவியிடம் பெண்கள் விடுதியின் வார்டன், உன்னுடைய ஆடை சரியில்லை, அதனால்தான் , அவன் உன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று இருக்கிறான் என்று கூறியுள்ளார்.

மாணவர்கள் கொந்தளிப்பு
இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த வார்டன், தம் அடிக்கும், தண்ணி அடிக்கும் பெண்களிடம் ஆண்கள் இப்படித்தான் தவறாக நடக்க முயல்வார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் கொதித்து போன மாணவர்கள், தற்போது அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பரபரப்பு
இந்த நிலையில் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கல்லூரியின் பெண்கள் விடுதி வார்டனுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைத்து வருகிறார்கள். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைக்கு எல்லாம் ஆடைதான் காரணம் என்று மோசமான பழைய வாதத்தை வைப்பீர்கள் என்று கேட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications