செல்போனில் வளைத்து வளைத்து கிளிக் செய்த பரூக் அப்துல்லா! கெத்தாக போஸ் கொடுத்த துரைமுருகன்!
ஸ்டாலினை செல்போனால் கிளிக் செய்த பரூக் அப்துல்லா.
சென்னை: சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா சின்னக் குழந்தையை போல் தனது செல்போனில் ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடிப்பதில் ஆர்வமாக இருந்தார்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மூத்த அரசியல் தலைவர் என பல பெருமைகள் இருந்தாலும் அதைக் கொஞ்சம் கூட பரூக் அப்துல்லா வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினையும், தன்னையும் பரூக் அப்துல்லா தனது செல்போனில் கிளிக் செய்வதை பார்த்த துரைமுருகன் கெத்தாக அமர்ந்து அவருக்கு சைலண்டாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஸ்டாலின் பிறந்தநாள்
திமுக தலைமை கழகத்தின் சார்பில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சரை வாழ்த்திப் பேசுவதற்காக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

பரூக் அப்துல்லா
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வரவேற்று பேசிக்கொண்டிருந்த போது, பரூக் அப்துல்லா தனது சட்டை பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து கூட்டத்தை நோக்கி ஃபோகஸ் செய்ய ஆரம்பித்தார். கூட்டத்தை இரண்டு மூன்று முறை கிளிக் செய்துவிட்டு அப்படியே மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலினையும் கிளிக் செய்ய ஆரம்பித்தார். இதனைக் கவனித்த துரைமுருகன் மிகவும் கெத்தாக அமர்ந்து பரூக் அப்துல்லா எடுத்த ஸ்டில்களுக்கு சத்தமின்றி போஸ் கொடுத்தார்.

கிளிக் செய்வதில் ஆர்வம்
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மூத்த அரசியல் தலைவர் என பல பெருமைகள் இருந்தாலும் அதைக் கொஞ்சம் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் கூட்டத்தினரையும், முதல்வரையும் படம் பிடிப்பதில் ஆர்வமாக இருந்தார் பரூக் அப்துல்லா. பரூக் அப்துல்லாவையும், அகிலேஷ் யாதவையும் முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர வைப்பார்கள் என்று பார்த்தால் ஆளுக்கொரு கார்னரில் அவர்கள் இருவரும் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

தேஜஸ்வி யாதவ்
இந்த நாற்காலி அரேஞ்ச்மெண்ட் யார் செய்த வேலை என்று தெரியவில்லை. இதனிடையே பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இந்தக் கூட்டத்தில் மிகவும் காலதாமதமாக பொதுக்கூட்டம் முடிவடைவதற்கு முன்னர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications