முதலமைச்சர் ஸ்டாலினின் மனிதநேயம்! சென்னையில் நடந்த தரமான செயல்! ஆச்சரியப்பட்ட அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் மனிதநேயமிக்க செயற்பாடு ஒன்று அவரது இமேஜை இன்னும் கூடுதலாக உயர்த்தியுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இருந்து தனது இல்லம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் விபத்தில் சிக்கி துடித்துக் கொண்டிருந்த ஒரு உயிரை காப்பாற்றியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றித் தான் கோட்டை வட்டார அதிகாரிகள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

அண்ணா சாலை

அண்ணா சாலை

மதுரை மருத்துவக் கல்லூரியில் புது நூலகம் மற்றும் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதன் பிறகு அமைச்சர் பொன்முடியை தனது காரில் ஏற்றிக்கொண்டு கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணா சாலையில் உள்ள ஏஜி டி.எம்.எஸ். என்ற இடத்தின் அருகே முதல்வர் வந்து கொண்டிருந்த போது, சாலையின் இடதுபுறம் டூவிலரில் சென்ற இளைஞர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்.

 முதல்வர் முதலுதவி

முதல்வர் முதலுதவி

இதனைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தனது காரை நிறுத்தச் சொல்லி விறுவிறுவென இறங்கிச் சென்று கீழே விழுந்த நபருக்கு தனது காவலர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காயங்களுக்கு மருந்து போடுமாறு அங்கிருந்த போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுறுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த மனிதாபிமானமிக்க செய்ய அவருக்கு பாராட்டை பெற்றுள்ளது.

கடற்கரை சாலை

கடற்கரை சாலை

பொதுவாக தலைமைச் செயலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்றால் பீச் ரோடு வழியாக சென்று ராதாகிருஷ்ணன் சாலை வழியே முதல்வர் செல்வது வழக்கம். கட்சி அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் இருந்தால் அண்ணா சாலை வழியாகவும் அவர் அவ்வப்போது பயணிப்பது வழக்கம். இதனிடையே அண்ணா சாலையில் சுமார் 5 நிமிடம் முதலமைச்சரின் கான்வாய் நின்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் யார் காயம்

விபத்தில் யார் காயம்

இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிய நபர் சென்னை சூளைமேட்டை சேர்ந்த அருள் ராஜ் என்பதும் அவர் பணி நிமித்தமாக சென்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+