இந்திக்கு தாய்ப்பால்! தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால்! அமித்ஷாவை ஒரு பிடி பிடித்த ஸ்டாலின்!
சென்னை: இந்திக்கு தாய்ப்பாலும் தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் கொடுப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அது தொடர்பாக பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

அலுவல் மொழி
அலுவல் மொழி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக தமிழக சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதை முன் மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசையும், அமித்ஷாவையும் ஒரு பிடி பிடித்தார். குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

மொழிப்போராட்டம்
இந்திக்கு எதிரான போராட்டம் வெறும் மொழிப்போராட்டம் மட்டுமல்ல என்று கூறிய ஸ்டாலின் தமிழினத்தையே பாதூகாக்கும் போராட்டம் எனத் தெரிவித்தார். ஆட்சி நிர்வாகத்தில் தொடங்கி கல்வி வரை இந்தி திணிப்பு ஒன்றையே மத்திய அரசு நோக்கமாக கொண்டு செயல்படுவதாக சாடினார். பல்வேறு இனம் மதம் மொழி கொண்ட இந்தியாவை மாற்ற முயல்கிறார்கள் என மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டினார்.

இந்திக்கு தாய்ப்பால்
மேலும், இந்திக்கு தாய்ப்பாலும் தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் கொடுப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு மொழி ஆதிக்கம் கூடாது என்பதை இதுவரை பிரதமராக இருந்தவர்கள் உணர்ந்து செயல்பட்டார்கள் எனத் தெரிவித்தார். நாட்டின் பன்முகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுவதாக மிகுந்த வேதனைத் தெரிவித்தார் ஸ்டாலின்.

ஆட்சி மொழி
தமிழ் உட்பட மாநில மொழிகள் அனைத்தும் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்த முதல்வர் ஸ்டாலின் இந்தி மொழி அடிப்படையில் இந்தியாவை மத்திய அரசு மூன்றாக பிரித்து பார்ப்பதாக தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் முன் மொழிந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி, காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வழிமொழிந்து வரவேற்றன.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications