திமுக ஆட்சி அமைந்தபிறகும்... ஸ்டெர்லைட் ஆலை எந்தச் சூழலிலும் திறக்கப்படாது -ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சி அமைந்தபிறகும் ஸ்டெர்லைட் ஆலை எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் மற்றும் ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர்
''ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.மு.கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் 'ஆர்.எஸ்.பாரதி அவர்களும், கழகத்தின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரி கனிமொழி அவர்களும் பங்கேற்று, கழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.''

''மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானது தான்.''
''தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.''
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க திமுக ஒப்புதல் தெரிவித்த நிலையில், அது தொடர்பான விமர்சனங்கள் எழத் தொடங்கின. இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக ஏன் அந்த முடிவை எடுத்தது என்பது பற்றியும் ஸ்டெர்லைட் ஆலை எக்காரணத்தை கொண்டு திறக்கப்படாது என்ற உறுதியையும் அவர் இந்தப் பதிவின் மூலம் அளித்திருக்கிறார்.
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications