ஒரே ஆண்டில் 85% சரிந்த ஸ்டார்ட்அப் முதலீடு! கர்நாடகா கூட பரவாயில்லை.. தமிழகத்தின் நிலை ரொம்பவே மோசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வந்த நிதி கடந்த 2023ஆம் ஆண்டு கடுமையாகக் குறைந்துள்ளதாக ட்ராக்ஸ்ன் ஜியோ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ட்ராக்ஸ்ன் ஜியோ என்ற இந்த அமைப்பு மாநிலம் வாரியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு எந்தளவுக்கு நிதி கிடைத்துள்ளது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

Startups Funding has heavily doped in Karnataka, Gujarat, and Tamilnadu in 2023

கர்நாடகா: ஸ்டார்ட்அப் தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூருக்குக் கிடைக்கும் நிதி கடுமையாகக் குறைந்துள்ளது. பெங்களூர் அமைந்துள்ள கர்நாடகாவுக்குக் கடந்த 2022இல் மொத்தம் $12.2 பில்லியன் (ஒரு லட்சம் கோடி ரூபாய்) நன்கொடை கிடைத்துள்ளது. ஆனால், கடந்தாண்டு 72% குறைந்து வெறும் $3.4 பில்லியன் (28 ஆயிரம் கோடி) மட்டுமே நன்கொடையாகக் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு: அதேபோல குஜராத் மாநிலத்தில் உள்ள டெக் ஸ்டார்ட்அப்களுக்கு கடந்த 2022இஸ் $412 மில்லியன் (3.4 ஆயிரம் கோடி ரூபாய்) நிதி கிடைத்த நிலையில், அது 2023இல் 66% குறைந்து $139 மில்லியனாக (1.1 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்து இருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் நிதி தான் மிகக் கடுமையாகக் குறைந்துள்ளது. கடந்த 2022இல் தமிழகத்திற்கு 1.7 பில்லியன் (14 ஆயிரம் கோடி) நன்கொடையாகக் கிடைத்த நிலையில், இந்தாண்டு 85% குறைந்து அது வெறும் 255 மில்லியன் டாலராக (2 ஆயிரம் கோடி) உள்ளது.

பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டத்தில் நிதி தேவைப்படும். அப்படி புராஜக்ட் முடியும் தருவாயில் கிடைக்க வேண்டிய நிதி முதலீடுகளுக்கு லேட் ஸ்டேஜ் முதலீடு என்று அர்த்தம்.. கர்நாடகாவில் இந்த லேட் ஸ்டேஜ் முதலீடுகள் 2022ல் $8.9 பில்லியனாக (ரூ. 73 ஆயிரம் கோடி) இருந்த நிலையில், அது 2023ல் $2.3 பில்லியனாக (ரூ. 19 ஆயிரம் கோடி) குறைந்துள்ளது. கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் $100 மில்லியன் முதலீடுகளை 26 மற்றும் 44 முறை பெற்ற நிலையில், இந்தாண்டு இது வெறும் எட்டாகக் குறைந்து இருக்கிறது.

எந்த துறைக்கு அதிகம்: ஃபின்டெக், சில்லறை வணிகம் மற்றும் செயலி உருவாக்கம் நிறுவனங்களுக்குத் தான் அதிக முதலீடுகள் கிடைத்துள்ளன. கர்நாடகாவில் உள்ள ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 2023இல் $1.15 பில்லியன் நிதி கிடைத்துள்ளது. இது 2022ஆம் ஆண்டு கிடைத்த $2.4 பில்லியன் உடன் ஒப்பிடுகையில் 51% குறைவாகும். அதேபோல சில்லறை வணிகத் துறைக்கு $956 மில்லியன் டாலரும் செயலிகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு $928 மில்லியன் டாலரும் முதலீடாகக் கிடைத்துள்ளது.

மேலும், ஒரு மாநிலத்தில் எந்த நகரம் எவ்வளவு தொகையை நன்கொடையாகப் பெற்றுள்ளது என்ற தகவல்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகாவைப் பொறுத்தவரை அதிகபட்சமாகப் பெங்களூர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் $3.4 பில்லியன் (ரூ. 28 ஆயிரம் கோடி) நன்கொடை கிடைத்துள்ளது... அதேநேரம் ஹூப்ளி நகருக்கு $121,000 டாலர் முதலீடு கிடைத்துள்ளது.

குஜராத்தைப் பொறுத்தவரை வதோதராவுக்கு $65 மில்லியன் (ரூ.5 ஆயிரம் கோடி) முதலீடு கிடைத்துள்ள நிலையில், சூரத் மற்றும் அகமதாபாத்தைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முறையே $41 மில்லியன் (ரூ 3,400 கோடி) மற்றும் $33 மில்லியன் (ரூ. 2,700 கோடி) முதலீடு கிடைத்துள்ளது.

சென்னைக்குத் தான் அதிகம்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான முதலீடுகள் சென்னைக்கு மட்டுமே வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கிடைத்த நன்கொடையில் சுமார் 97% நன்கொடை சென்னைக்குத் தான் கிடைத்துள்ளது. சென்னைக்கு மட்டும் கடந்தாண்டு $247 மில்லியன் (2 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீடு கிடைத்துள்ளது. அடுத்து கோவைக்கு $6 மில்லியன் (ரூ. 39 கோடி) மற்றும் ராணிப்பேட்டை $2 மில்லியன் (ரூ. 16 கோடி) முதலீடு கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+