தமிழகத்தில் மொத்தம் 6,36,25,813 பேர் ஓட்டுப்போட ரெடி - இறுதி வாக்காளர் பட்டியல் ரிலீஸ்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளதாகவும் அதில் ஆண் வாக்காளர்கள் 3,12,26,759 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,23,91,250 மூன்றாம் பாலினத்தவர் 7,804 பேர் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜனவரி 31ஆம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பொங்கலையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் ஜனவரி 1ஆம் தேதியை இலக்காகக் கொண்டு கடந்த ஆண்டு முதலே பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து வாக்காளர் சேர்க்கை, திருத்தம் செய்துகொள்ள ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு அதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் டிசம்பர் மாதம் வாக்காளர் திருத்தப் பணிகள் வார இறுதி நாட்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தன.

இறுதி வாக்காளர் பட்டியல் ரிலீஸ்
இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியீடும் வாக்காளர் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பொதுமக்கள் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்கம் ஆகிய திருத்தங்கள் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் பணிகள் முடிவடைந்ததால் இன்று வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

அடையாள அட்டை
01.01.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2022-ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று (05.01.2022) வெளியிடப்பட்டுள்ளன. 2. 01.01.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 01.11.2021 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இட மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 01.11.2021 -ஆம் தேதியிலிருந்து 30.11.2021 -ஆம் தேதிவரை பெறப்பட்டன.

வாக்காளர் பட்டியலில் பெயர்
மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 10,36,917 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 10,17,456 விண்ண ப்பங்கள் (ஆண்கள் 4,56,071 ; பெண்கள் 5,60,735 | மூன்றாம் பாலினத்தவர் 650) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 2.96,107 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 2.86,174 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (80.018), இறப்பு (1,90.470) மற்றும் இரட்டைப் பதிவு (15,686) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை
பதிவுகளில் திருத்தங்கள் செய்யக்கோரி 1,70,271 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 1,61,461 (ஆண்கள் 83,907 : பெண்கள் 77,479 , மூன்றாம் பாலினத்தவர் 75) ஏற்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,23,348 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1,20,338 (ஆண்கள் 56,421; பெண்கள் 63,899: மூன்றாம் பாலினத்தவர் 18) ஏற்கப்பட்டு உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2022 ஆம் ஆண்டு சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி தமிழ்நாட்டில் 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,12,26,759; பெண் வாக்காளர்கள் 3,23,91,250 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,804 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி
மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 7:11,755 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 3,56,239 பேர் பெண்கள் 3,55,394 பேர் மூன்றாம் பாலினத்தவர் 122 பேர். இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,76,467 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 2,37,305 பேர், பெண்கள் 2.39,021 பேர் மூன்றாம் பாலினத்தவர் 141 பேர்.

நாகப்பட்டினம்
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது, இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,517 ஆவர். அதில் ஆண்கள் 86,893 ; பெண்கள் 91.613 ; மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் ஆவர் . இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட18-துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,665 ஆவர். ஆண்கள் 92.978 பேர் பெண்கள் 85.626 பேர் மூன்றாம் பாலினத்தவர் 61 பேர்.

வெளிநாடுவாழ் வாக்காளர்கள்
வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 8 பேரின் பெயர்களும் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம், 2022-ம் காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதுவரை, 4,88,888 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 2022-ஆம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 18-19 வயதுள்ள 4,32,600 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்கள் 2.29,338; பெண்கள் 2,03,125; மூன்றாம் பாலினத்தவர் 137 பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 01.01.2022 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். www.nvsp.in இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து "Voter Helpline App" செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.

1950" என்ற கட்டணமில்லாத் தொலைபேசி
இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய அறிவுறுத்தலின்படி, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒரு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல் மற்றும் ஒரு மென் நகல் குறுந்தகடுக்கு பதிலாக, இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குமாறு அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தொடர்பு மையங்களை "1950" என்ற கட்டணமில்லாத் தொலைபேசியில் அழைக்கலாம்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications