எல்லாத்துக்கும் அவரே காரணம்! ஒட்டுமொத்தமாய் போட்டுடைத்த சி.வி.சண்முகம்! சிக்க போகும் ‘புள்ளி’ யார்?
சென்னை : அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற கலவர வழக்கு தொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளருமான சிவி சண்முகம் சிபி செய்தி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி ஓ பன்னீர்செல்வம் தரப்பு குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன் அடிப்படையில் ஓபிஎஸ் ஆதரவு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு இந்த கலவர வழக்கில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சிபிசிஐ போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகம்
பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சீல் அகற்றப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் கட்சி அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார்.

சிபிசிஐடி விசாரணை
இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்ததோடு, சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டார். மேலும் குழுவில் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோரும்இடம்பெற்றனர்.

100 பேர்
இந்நிலையில் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான விசாரணை குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கலவரம் தொடர்பான வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை வைத்து இதுவரை 100 நபர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிவி சண்முகம்
தற்போதுஇந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற கலவர வழக்கு தொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளருமான சிவி சண்முகம் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி ஓ..பன்னீர்செல்வம் தரப்பு குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வாக்குமூலம்
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமை கழக மேலாளரான மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்ற நிலையில் இன்று புகார்தாரரான முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநிலங்களை உறுப்பினருமான சி.வி.சண்முகத்தின் எம்ஆர்சி நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சி.பி.சி.டி போலீசார் நேரில் சென்று தகவல்களை சேகரித்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அறையில் இருந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.

சிக்கப்போகும் முக்கிய புள்ளி
இந்த நிலையில் இதில் யார் யார் சதி திட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும் அதற்கான ஆதாரங்கள் குறித்தும் சிபிசிஐடி போலீஸ் சண்முகத்திடம் கேட்டு பெற்றுள்ளனர். மேலும் சிபிசிஐடி போலீசாரிடம் விரிவான வாக்குமூலத்தை சிவி சண்முகம் அளித்துள்ளதாகவும் அதிமுக அலுவலகத்தில் மோதலில் ஈடுபட யார் யார் சதி திட்டம் தீட்டியது யார் யாருக்கு முக்கிய பங்கு உள்ளது என பல தகவல்களை அவர் கூறியிருக்கிறார் மேலும் அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் சி.வி சண்முகத்திடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையும் ஒப்பிட்டு போலீசார் சில முடிவுகளை எடுத்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் ஓபிஎஸ் ஆதரவு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு இந்த கலவர வழக்கில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சிவி சண்முகம் கூறியிருப்பதாகவும் இதை எடுத்து அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சிபிசிஐ போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்!












Click it and Unblock the Notifications