அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பிடி கொடுக்காமல் கறார் காட்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சட்ட ரீதியான சிக்கல்கள் மூலம் பணிய வைக்க டெல்லி மேலிடம் திட்டமிடுகிறதா என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.. இதை பற்றின ஒரு ஸ்பெஷல் எக்ஸ்க்ளூசிவ் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.
என்டிஏ கூட்டணிக்குள் விஜய் வருவதற்காக பாஜக தேசிய தலைமை பல ரகசிய உத்தரவாதங்களைக் கொடுத்திருந்தது.. ஆனால், "பாஜக தருகிற அந்த உத்தரவாதங்களுக்கு அதிமுக தலைமைக்கு உடன்பாடு உண்டா? முதலில் அவர்களிடமிருந்து ஒப்புதலைப் பெறுங்கள்" என்று பாஜகவுக்குத் தகவல் தந்து விஜய்யும் ஒரு செக் வைத்தார்..

இதனையடுத்து, அமித்ஷாவின் அட்வைசின் பேரில் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்தார்.. கான்ஃப்ரன்ஸ் காலில் நடந்த அந்த விவாதத்தின் போது, பாஜகவின் துணைத் தலைவரான ஜே.பி. என்கிற ஜெயப்பிரகாஷும் இணைந்திருந்தார்.. பியூஸ்கோயலுக்கும் எடப்பாடிக்கும் இணைப்பு பாலமாக அடிக்கடி இருந்து வருபவர் ஜெயப்பிரகாஷ்.
அழுத்தக்காரர் எடப்பாடி பழனிசாமி
கான்ஃப்ரன்ஸ் காலில் நடந்த அந்த விவாதத்தின் போது, பாஜக தரப்பிலிருந்து விஜய்க்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களை சுட்டிக்காட்டிப் பேசிய பியூஸ் கோயல், "திமுகவை வீழ்த்த விஜய்யைக் கூட்டணிக்குள் கொண்டு வருவதுதான் ஒரே வழி.. திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிப்பது அதிமுக-பாஜக இரு கட்சிகளுக்கும் அவசரத் தேவை..
ஆனால் விஜய்க்கு அப்படியில்லை, அவர் தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் இழப்பதற்கு அவரிடம் வேறு எதுவும் இல்லை.. வெற்றி தோல்வி சகஜம் என ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டு அவர் மீண்டும் சினிமாவுக்குப் போய்விடலாம்.. ஆனால் அதிமுக-பாஜகவுக்கு அப்படியில்லையே! அதிமுக ஆட்சிக்கு வராது போனால் உங்கள் நிலை என்னவாகும் என யோசியுங்கள்.. உங்களுக்கு எதிராக உங்கள் கட்சியின் சீனியர்களே கலகம் செய்வார்கள்.. அது உங்களின் தலைமைக்கே ஆபத்தை உருவாக்கலாம்..
திமுகவுக்கு செக்
அதுமட்டுமல்லாமல், அடுத்த 5 ஆண்டுகாலம் அதிமுகவைக் காப்பாற்ற நீங்கள் போராட வேண்டியதிருக்கும்.. அதற்குள் உங்களை நம்பியுள்ள அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் திமுகவுக்கும், விஜய் கட்சிக்கும் தாவிவிடுவார்கள்.. இது போன்ற இழப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும்..
அதனால், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய தேவை நமக்குத்தான் இருக்கிறது.. அதனால், என்.டி.ஏ. கூட்டணிக்கு விஜய்யைச் சேர்ப்பதில் பல நன்மைகள் இருக்கிறது.. விஜய்க்கு ஓகே சொல்லுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று எதார்த்த அரசியலையும் எதிர்கால அரசியலையும் பேசியிருக்கிறார்..
பாஜக வைத்த நிபந்தனை
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "விஜய்யை கூட்டணியில் சேர்க்க நான் எதிர்க்கவில்லை.. ஆனால் கூட்டணிக்காக அவர் சொல்லும் நிபந்தனைகளை என்னால் ஏற்க இயலாத சூழல்.. இப்பவும் நான் சொல்வது, திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கு இணையாக அதிமுக போட்டியிடும்..
ஒன்றிரண்டு வேண்டுமானால் கூடுதல் குறைவாக இருக்குமே தவிர, மிகவும் குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட அதிமுக சீனியர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்..
அதே சமயம் நமது கூட்டணிக்கு அவர் வருவதாக இருந்தால் 25 தொகுதிகளைத் தர முடியும்.. இது கௌரவமான சீட் தான்.. மேலும் வலியுறுத்தப்பட்டால் அதிகப்பட்சம் 30 தொகுதிகளை அதிமுக ஒதுக்கும்.. இதைத் தாண்டி வேறு எந்த நிபந்தனைகளையும் என்னால் ஏற்க இயலாது.. அதிமுக சீனியர்களும் 30-க்கு அதிகமாக சீட் தர ஒப்புக்கொள்ளமாட்டார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்..
ஓகே சொல்ல முடியாது
ஒருகட்டத்தில் சீட் எண்ணிக்கையைக் கடந்து இரண்டரை ஆண்டு சி.எம், துணை முதல்வர், கேபினட் என்கிற கோரிக்கைகள் தொடர்பான பேச்சு வந்தபோது, "இவைகளுக்கு ஓகே சொல்ல முடியாது.. கூட்டணி ஆட்சி என்கிற விவாதமே தேவையற்றது.. அதில் எங்களுக்கு விருப்பமில்லை.. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆலோசிக்க வேண்டியதை இப்போது பரிசீலிக்கக் கூட என்னால் முடியாது; ஓகே சொல்லவும் இயலாது.. இதுதான் எங்களின் நிலைப்பாடு" என்று தெளிவுபடுத்தி விட்டார் எடப்பாடி பழனிசாமி..
அதிமுகவின் இந்த பதில்களில் ஷாக் ஆன பியூஸ்கோயல், உடனடியாக எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டை அமித்ஷாவுக்குத் தெரிவித்திருக்கிறார்.. இதனையடுத்து, விஜய்யை மையப்படுத்தி அடுத்தகட்ட நகர்வுகளைத் தொடரலாமா அல்லது அதிமுகவிடமிருந்து பாஜகவிற்கான சீட் எண்ணிக்கை குறித்துப் பேச்சுவார்த்தையை தொடங்கலாமா என அமித்ஷா தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது..
ஏப்ரல் 14 வழக்கு விசாரணை
இந்தச் சூழலில்தான், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, சொத்துக்களை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு திடீரென்று உயிர் பெற்றுள்ளது.. இந்த வழக்கு குறித்து நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நிலுவையில் உள்ள இந்த வழக்கு ஏப்ரல் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் உயிர் பெற்றுள்ள இந்தச் சொத்து மறைப்பு வழக்கு, எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பெரும் நெருக்கடியைக் கொடுக்கக்கூடியது..
அடுத்து என்னாகும்
ஒருவேளை தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை மறைத்தது நிரூபிக்கப்பட்டால், அது அவரது எம்.எல்.ஏ பதவிக்கே ஆபத்தாக முடிவதோடு, எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் தடையை ஏற்படுத்தலாம்.. இந்த சூழலைதான் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பாஜக மேலிடம் திட்டமிடுவதாக தெரிகிறது..
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் காட்டினால், இந்த வழக்கின் வேகத்தை அதிகரித்து அவரைச் சட்டச் சிக்கலில் முடக்குவது அல்லது கட்சியின் மற்ற சீனியர்களைத் தங்கள் பக்கம் இழுத்து அதிமுகவை பலவீனப்படுத்துவது என பாஜக காய் நகர்த்தவும் முயலலாம்..
டெல்லியின் இந்த "செக்" எடப்பாடியை பணிய வைக்குமா அல்லது அவர் சட்டப் போராட்டத்தின் மூலம் மீண்டு வருவாரா என்பதுதான் தற்போதைய தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வி.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
- சிறப்பு நிருபர் எழில்
-
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
புதிய தமிழகம் கட்சிக்கு 2 சீட்.. அப்செட்டில் இருந்த நயினார் நாகேந்திரன்! நம்பிக்கையாக சொன்ன எடப்பாடி -
அதிமுகவில் காளியம்மாளுக்கு சீட் இல்லையாம்.. அந்த தொகுதியில் பாமக கோரிக்கை.. வாக்கு கொடுத்த எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி! -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications