கல்விதான் மிகப்பெரிய சொத்து..நல்லா படிங்க..உங்களின் ஒருவனாக சொல்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்: அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பிழையின்றி எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1 முதல் 3ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
Recommended Video
திருவள்ளூர், புழல் அருகே அழிஞ்சிவாக்கம் பகுதியில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. அப்போது கற்றல் கற்பித்தல் உபகரணங்களையும், ஆசிரியர் கையேடுகள் மற்றும் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் நோக்கமாக இருக்கிறது. தொடக்க கல்வி என்பது சமூகத்தின் திறவுகோல். தாகத்தை தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவு பெற வேண்டும் என்பதே நோக்கம்.
எண்ணும் எழுத்தும் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் ஏற்றமடையும் . ஆசிரியர்களின் கருத்து கேட்கப்பட்டு எண்ணும் எழுத்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எளிமையான வகையில் பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
கதை, ஆடல், பாடல் என பல்வேறு வடிவங்களில் மாணவர்களுக்கு பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார். படிப்பு..படிப்பு..படிப்பு என்று ஆர்வத்தோடு படிக்க வேண்டும். படிக்காதவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்று யாராவது உதாரணமாக சொன்னால் அதை சட்டை செய்ய வேண்டாம். படித்து சாதித்தவர்களை நாம் உதாரணமாக காண்பிக்க வேண்டும் என்றார். கல்விதான் அழிக்க முடியாத சொத்து அந்த கல்வியை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று முதல்வராக மட்டுமல்ல ஒரு தகப்பனாக கேட்டுக்கொள்கிறேன் உங்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன் என்று சொன்னார் முதல்வர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மை செயலாளர் காகர்லா உஷா, கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications