7 தமிழர்களை விடுதலை செய்ய கூடாது.. குடியரசு தலைவருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு தமிழீழ ஆதரவாளர்கள் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், 7 தமிழர்களை விடுதலை செய்யக் கூடாது என்பதில் எப்போதுமே விடாப்பிடியாக இருப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. இப்போதும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதைப் பாருங்கள்:
ராஜீவ்காந்தியை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ததாக உச்சநீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று நான் குடியரசுத் தலைவருக்கு நான் கடிதம் அனுப்புகிறேன். ராஜீவ்காந்தி மட்டுமல்லாது இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். இவ்வாறு ஒரு பதிவில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து மற்றொரு பதிவில் ராஜீவ் காந்தி குடும்பம் மட்டுமே, குற்றவாளிகளை மன்னிப்பதற்கு முடியாது என்று கூறி உள்ளார் சுப்பிரமணியம் சுவாமி.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன











Click it and Unblock the Notifications