பள்ளிவாசல்களுக்கு மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்! சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிவாசல்களுக்கு மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா நேற்றைய முன் தினம் சட்டசபையில் முன் வைத்த கோரிக்கையை தொடர்ந்து அவர் இதனை அறிவித்துள்ளார்.

Subsidy for mosques will be increased to Rs.10 crore! Chief Ministers announcement in the Assembly!

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது;

''நேற்று முன்தினம் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லா அவர்கள் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் Major Repair Grant (MRG) என்ற மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை வைத்தார்.''

''கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ.5 கோடியாக இருந்த இந்த மானியத் தொகையை கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சென்ற ஆண்டு, ரூ.6 கோடியாக உயர்த்தி வழங்கினோம்.''

Subsidy for mosques will be increased to Rs.10 crore! Chief Ministers announcement in the Assembly!

''தற்போது, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையையேற்று, பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் Major Repair Grant-MRG மானியத் தொகை வரும் நிதியாண்டு முதல் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். ''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+