பழனி கோயிலில் கொடி மரமே இல்லையாம்.. சுகி சிவம் பேச்சால் சர்ச்சை.. நீதிமன்ற தீர்ப்பு?
சென்னை: பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கொடிமரம் தாண்டி செல்ல நீதிமன்றம் தடை விதித்த நிலையில், மிகப்பெரிய டுவிஸ்டு ஒன்றை கொடுத்து இருக்கிறார் பிரபல ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், "பழனி கோயிலில் கொடிமரத்தை தாண்டி இந்து அல்லாதவர்கள் இங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற நன்றாக தெரியும்படி, அதாவது பார்வையில்லாதவர்கள் கண்ணாடி போடாமலேயே பார்க்கும்படி தெளிவாக எழுதி வைத்துவிடுங்கள். யாரும் கொடி மரத்தை தாண்டி வர முடியாது என்று கீழே எழுது என்று ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இப்போதுதான் நான் ஒரு முக்கியமான விசயம் சொல்லப்போகிறேன். பழனி மலைக் கோயிலில் கொடிமரமே கிடையாது.

ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயிலில்தான் கொடி மரம் இருக்கும். ஆகம விதியை மீறி சித்தர்களால் கட்டப்பட்ட கோயிலில் கொடி மரம் இருக்காது. ஆக, பழனி மலைக் கோயில் சித்தர்களால் கட்டப்பட்ட கோயில் என்பதால் அதில் கொடி மரம் இல்லை. கொடி மரமே இல்லாத கோயிலுக்கு ஒருவர் வழக்கு தொடர்கிறார். ஒருவர் பதில் எழுதுகிறார். ஒரு நீதிபதி தீர்ப்பு எழுதுகிறார். இவர் யாருக்கும் சாமி முக்கியம் இல்லை. சண்டை முக்கியம். இப்போது வந்தது தனி நீதிபதியின் தீர்ப்பு.
இதற்கு முன் ஏற்கனவே 2 நீதிபதிகளின் தீர்ப்பு இருக்கிறது. முதலாவது கோயிலுக்கு வருபவரிடம் எல்லாம் எந்த மதம் என்று கண்காணித்துக் கொண்டு இருப்பதற்கு நேரம் கிடையாது. ஒரு கோயில் கும்பாபிஷேகம் வரும்போது நீ யார்? என்ன சாதி? என்ன மதம்? என்று கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. இதற்கு சாத்தியமே கிடையாது. எனவே அந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டார். 2 வது நீதிபதியோ, வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்று கேட்கிறீர்களே. ஜேசுதாஸ் பாடிய பாடலைதான் ஐயப்பனுக்கு போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். என்றார்.
என்னிடம் கேட்டால் ஐயப்பனுக்கு ஜேசுதாஸைதான் ரொம்ப பிடிக்கும். அவர் எந்த மதம் என்று கவலைப்பட்டாரா? இல்லைதானே. ஜேசுதாசின் பாடலை போடுகிறோமே.. ஜேசுதாசின் ஆன்மீகத்தை கேள்வி கேட்க முடியுமா? 3 வதாக ஒரு வார்த்தை சொன்னார்கள். அருமையான வார்த்தை அது. ஒரு நம்பிக்கையை பார்க்க உள்ளே வருகிறார்கள் என்றாலே அதன் மீது நம்பிக்கை வைத்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். இதை ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்காதீர்கள். நன்றாக இருக்காது என்றார்.
இல்லை என்றால் அவர் ஏன் உள்ளே செல்ல வேண்டும். வெடிகுண்டு வைப்பதற்கா உள்ளே செல்கிறார். நம்ம ஆள் வெடிகுண்டு வைப்பவரைதான் சரியாக உள்ளே விடுகிறார். கும்பிட செல்பவரை விட்டுவிடுகிறார். குல தெய்வ வழிபாட்டை விட்டுவிடாதீர்கள் என்று எல்லா பத்திரிகையிலும் போடுவார்கள். அது நல்லதுக்காக சொல்லும் யோசனை என்று நினைத்துவிடாதீர்கள். குல தெய்வ வழிபாடு இருக்கும் வரை ஜாதி இருக்கும். நான் ஒரு வார்த்தை சொன்னால் என்னை பிச்சு எடுக்கிறார்கள். இப்போது நான் விவேகானந்தரின் வார்த்தைகளை படிக்கிறேன்.
"மாபெரும் சகாப்தத்தையே உருவாக்கியவர்களான சங்கராச்சாரியார்களும், மற்றவர்களும்தான் சாதியையும் உருவாக்கினார்கள். அவர்கள் கட்டிவிட்ட வினோத கதைகளை உங்களுக்கு சொல்ல முடியாது. சொன்னால் உங்களுக்கு கோபம் வரலாம். இந்த தேசத்தில் பிரதம மந்திரி சிலை வைக்கும்போதே, பூரி சங்கராச்சாரியார், அவர் எல்லாம் செய்வதை பார்த்து என்னை கைத்தட்டி வேடிக்கை பார்க்க சொல்கிறாயா? என்கிறார். இதே விசயம் சராசரி மனிதர் சொல்லி இருந்தால் இந்நேரம் அவர் கைது செய்திருப்பார். " என்றார்.
இதனிடையே பழனி கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு நடைபெறும் பூஜைகள் தொடர்பாக வெளியான பத்திரிக்கை புகைப்படங்களை வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் போட்டு சுகி சிவம் இதை கூட ஏன் தெரிந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications