தமிழகத்தில் சுட்டெரித்த சூரியன்... கரூர் பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட் - எங்கு எவ்வளவு வெப்பம் பதிவு
தமிழகத்தில் அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 செல்சியஸ் அதாவது 103.1 ஃபாரன்ஹீட் டிகிரி வெப்பம் பதிவானது.
சென்னை: தமிழகத்தில் பங்குனி மாத வெயில் பட்டையை கிளப்புகிறது. இன்று 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. ரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், சேலம் ஆகிய 5 ஊர்களில் இன்று அதிக அளவில் வெயில் சுட்டெரித்தது.
அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்க இன்னும் 1 மாதம் உள்ள நிலையில் அனலாய் தகிக்க ஆரம்பித்து விட்டது. காலை நேரங்களில் சுடும் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்க ஆரம்பித்து விட்டனர்.
மழைக்கு இதமாக ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது என்றாலும் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தை மக்களால் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதிக பட்ச வெப்பம் பதிவு
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது.இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு சென்ற மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய வெப்பநிலை
தமிழகத்தில் இன்று 5 ஊர்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், சேலம் ஆகிய 5 ஊர்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவைக் கடந்துள்ளது.

எங்கு எவ்வளவு வெப்பம்
அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 செல்சியஸ் அதாவது 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்ததாக மதுரை விமான நிலையத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் அதாவது 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. மதுரை நகரில் 38.6 செல்சியஸ் அதாவது 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோடு, சேலத்தில் 38 டிகிரி செல்சியஸ் அதாவது 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

கோடை மழைக்கும் வாய்ப்பு
பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி மழையும் பெய்து வருகிறது. கோடை வெயிலுக்கு இதமாக இடியும் மின்னலுமாய் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications