Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தட்கலில் விவசாய மின் இணைப்புகள்? மின்சார வாரியம் ஒரே போடு.. தமிழக அரசுக்கு பெரிய கோரிக்கை.. ஹப்பாடா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க அரசு அனுமதி அளித்ததில், வெறும் 20,000 மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், மற்ற விண்ணப்பதாரர்களுக்கு எப்போது மின் இணைப்புகள் வழங்கப்படும்? என்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, விவசாயிகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கவே இந்த இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..

tneb agricultural electricity connection


மின்வாரியம்:
இதற்காக, மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாகவே வழங்குகிறது. அந்தவகையில், 2 லட்சம் விவசாயிகளுக்கு மேல் இலவச மின்சார இணைப்புகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இப்போதைக்கு 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒரு இணைப்புக்கு வருடத்துக்கு மின்சார வாரியத்துக்கு 30,000 ரூபாய் செலவாகிறது.. வருடத்துக்கு 7,280 கோடி ரூபாய் செலவாகிறது. இதை, தமிழக அரசே வழங்குகிறது.

விவசாய மின் இணைப்பு: ஆனால் தற்போது மின் வாரியமும், தமிழக அரசும் நிதி நெருக்கடியில் இருப்பதால், வருடந்தோறும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே, விவசாய மின் இணைப்புகள் வழஙகப்பட்டு வருகின்றன. கடந்த 2021 மார்ச் வரை, 4.54 லட்சம் பேர் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன..

அதேபோல, கடந்த 2022 - 23ல், 50,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன.கடந்த 2023 - 24ல், 50,000 இணைப்புகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது.. கடந்த மார்ச் மாத்துடன் 20,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால், மற்ற விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது...

முழு பணம்: குறிப்பாக, சுயநிதி பிரிவில், தட்கலில் வழித்தட செலவுக்கு முழு பணத்தையும் செலுத்திய விவசாயிகள், மின் இணைப்பு வழங்குமாறு தொடர்ந்து கேட்டு வருகிறார்களாம். அதனால்தான், மின்வாரியம், புதிய முடிவினை தற்போது எடுத்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் சொன்னதாவது:

"கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால், தென் மாவட்டங்களில் டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள், மின் கம்பிகள் உள்ளிட்ட சாதனங்கள் சேதமடைந்துவிட்டன.. இதனால், விவசாய மின் இணைப்பு வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே, கடந்த வருடம் வழங்கிய மின் இணைப்புகள் போக, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு இணைப்பு வழங்க, அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், விரைவாக மின் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

பெருத்த நம்பிக்கை: நிலுவையிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழக அரசிடம் மின் வாரியம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது, இது விவசாயிகளுக்கு பெருத்த நம்பிக்கையை தந்து வருகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+