பள்ளிகளுக்கு பறந்து வந்த முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி.. குஷியில் குதிக்கும் மாணவர்கள்..!
அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: தமிழகத்தின் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால், மாணவர்கள் குதூகலமடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் முதலே மூடப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன.
இதனால், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருந்து கல்வி கற்றனர்.

அழுத்தம்
இது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக பல மருத்துவ வல்லுநர்களும் கல்வியாளர்களும் கவலை தெரிவித்து வந்தனர். முன்னதாக, அதாவது 2020ல், தொற்று தமிழகத்தை மிரட்டி கொண்டிருந்த நேரத்தில், அனைத்து பள்ளிகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன..

நடவடிக்கை
குறிப்பாக, இறைவணக்கம் கூட்டம், உடற்கல்வி பாடவேளை போன்றவற்றுக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டன... காரணம், மாணவர்கள் கூடுவதை தடுக்கவும், தொற்றின் தடுப்பு நடவடிக்கையாகவும் இந்த நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறை எடுத்திருந்தது.. இதற்கு பிறகுதான், மெல்ல மெல்ல தமிழகத்தில் தொற்று குறைந்து, தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டன..

உத்தரவு
அதன்படிதான், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.. பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான், பள்ளிகளில் இறை வணக்க கூட்டத்திற்கு மறுபடி அனுமதி தந்துள்ளது தமிழக அரசு.. தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.. ஆனால், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அறிவிப்புகள்
மேலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. கொரோனா தொற்று குறைந்து வருவதால் உடற்கல்வி பாடவேளைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், பள்ளிகளில் மறுபடியும் உடற்கல்வி வகுப்புகள் துவங்க உள்ளன.. இதனால் மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications