Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஎப் பணம்.. வருங்கால வைப்பு நிதி சம்பந்தமாக டவுட் இருக்கா? சென்னை உட்பட 10 இடங்களில் சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட 10 இடங்களில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற்று வருகிறது.. இதுகுறித்த முக்கிய அறிவுறுத்தலும், அது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது... அது என்ன?

EPF என்று சொல்லப்படும் பிஎஃப் என்பது பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகையாகும். அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பிஎஃப் கணக்குகள் கட்டாயம் நடைமுறையில் இருக்கும்.

pf money provident fund rs1 lakh

சம்பள கணக்கு: இந்த முறைப்படி, 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் பணியில் இருக்கும்வரை இந்த பிஎப் கணக்கும் அமலில் இருந்துக்கொண்டேயிருக்கும்.

ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இந்த சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதிய நன்மைகள் தவிர பல்வேறு நன்மைகள் பிஃப் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கின்றன...

இப்படி மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் பணத்தை, ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், இதற்காக ஒருகுறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.. ஒருசில காரணங்களுக்காக குறிப்பிட்ட அளவு தொகையை எடுக்க ஊழியர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தொழிலாளர்கள்: ஆனால், தொழிலாளர்களின் முதுமை காலத்திலோ அல்லது அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காகவோ வழங்கப்பட்டு வருகிறது.. அவசர மருத்துவச் செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வருங்கால வைப்பு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, மருத்துவ செலவுகளுக்காக, தொழிலாளர்கள் தங்களது முதுமை காலத்திற்கு முன்பே வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இதுபோல இன்னும் ஏராளமான வசதிகளும் இதில் செய்து தரப்பட்டுள்ளன. இதற்கெனவே பிரத்யேக வெப்சைட்களும் உள்ளன. அதேபோல, தொழிலாளர்களுக்காகவே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இது தொடர்பான குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

குறைதீர்க்கும் முகாம்: அந்தவகையில், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் "நிதி ஆப்கே நிகத்" (வைப்பு நிதி உங்கள் அருகாமையில்) என்ற தலைப்பில் குறைதீர்க்கும் இன்று தமிழகத்தில் நடந்து வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந்த குறைதீர்க்கும் முகாமினை நடத்தப்பட உள்ளது..

இதுதொடர்பாக வருங்கால வைப்புநிதி கமிஷனர் ஜெய் சங்கர் ராய் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.. அதில், "சென்னை வடக்கு மண்டலம் சார்பில் மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலையில் உள்ள பொது சுகாதார மையம், அம்பத்தூர் மண்டலம் சார்பில் மாதவரம் மில்க் காலனியில் உள்ள டி.சி.எம்.பி.எப். நிறுவனம் மற்றும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள வி.ஐ.டி. வளாகம், தாம்பரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் சதானந்தபுரத்தில் உள்ள மாதா இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜியில் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற உள்ளது.

10 முகாம்கள்: இதேபோல வேலூர், புதுச்சேரி மண்டல அலுவலகங்களின் சார்பிலும் என ஒட்டுமொத்தமாக 10 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 10 இடங்களில் நடந்துவரும் முகாம்களில், உறுப்பினர்களுக்கான சேவைகள், குறைகளை நிவர்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியர்களுக்கான இணையதள சேவைகள், புதிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள், ஒப்பந்ததாரர்களின் விவரங்கள் பதிவேற்றுதல் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கலாம்.. அதனால் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கோரிக்கை: முன்னதாக, புதுச்சேரி மண்டல, வருங்கால வைப்பு நிதி ஆணையர் விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்த செய்திகுறிப்பில், "தொழிலாளர் வருங்கால வைப்புநிதி தொடர்பாக முகாம், இன்று 27ம் தேதி, புதுச்சேரி - விழுப்புரம் சாலை, வடமங்கலம், அப்பாசாமி ஆக்குலர் டிவைசஸ் பிரைவேட் லிமிடெடில் நடக்கிறது. அதே போல, காரைக்காலில், பஜன்கோ மற்றும் ஆர்.ஐ., பகுதியில், காலை 9:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடக்கிறது.

முகாமில், வருங்கால வைப்பு நிதி மற்றும் சட்ட விதிகள், ஒழுங்குமுறைப்படி புதியதாக துவங்கப்பட்ட நிறுவனங்களுடைய முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குதல். தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் விளக்குதல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றி விளக்குதல், ஓய்வூதிதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட வைப்பு நிதி தொடர்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

இன்று முகாம்: முகாமில், பங்குபெற விரும்புவர்கள், தங்களின் விபரங்களை, https://docs.google.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+