சென்னையில் உச்சநீதிமன்ற கிளை! 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்திருந்தது. இந்நிலையில், இது குறித்த முக்கிய தகவலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கையில் சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் கெஜட்டில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது டெல்லியில் அரசியல் சாசன அமர்வு செயல்படும். இது தவிர, நாட்டின் 4 முனைகளில் நிரந்தர மண்டல கிளைகள் உருவாக்கப்படும். சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த நிரந்தர மண்டல கிளைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம் என்பது டெல்லியில் மட்டும் இருப்பதால், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட தென் மாநில மக்கள், வழக்குகளில் மேல் முறையீடு செய்ய சிரமப்பட்டு வருகிறார்கள். சாமானிய மக்கள் தொடுக்கும் வழக்குகள் பல கீழமை நீதிமன்றங்களுடன் நின்றுவிடுவதற்கு காரணம், உச்ச நீதிமன்றம் டெல்லி எனும் தொலை தூர நகரத்தில் இருப்பதால்தான். எனவே சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
அதேபோல இந்த கிளை அமைக்கப்படுவதால் நீதிமன்றத்திற்கும் பலன் இருக்கிறது. தற்போதைய சூழலில் உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகளை விரைந்து தீர்க்க வேண்டும் எனில், கிளை நீதிமன்றங்கள் உதவும்.
இப்படி இருக்கையில் தற்போது அரசு கெஜட்டில், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு 40 ஆண்டுக்கால எதிர்பார்ப்புக்கு தீர்வு கொடுத்திருக்கிறது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications