சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'நீட் மரணங்கள்' மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழை காணும் சாணக்கியர்கள்.. சூர்யா கொதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நேற்று நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து இது தொடர்பாக நடிகர் சூர்யா வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சூர்யா வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.

தமிழகத்தில் நேற்று நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக நடிகர் சூர்யா வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.

நீட் தேர்வு எப்படி இருந்தது? உயிர் கொடுத்த உயிரியல்.. இன்னல் தந்த இயற்பியல்.. மாணவர்கள் பேட்டிநீட் தேர்வு எப்படி இருந்தது? உயிர் கொடுத்த உயிரியல்.. இன்னல் தந்த இயற்பியல்.. மாணவர்கள் பேட்டி

நிர்பந்திக்கப்படுவது வேதனை

நிர்பந்திக்கப்படுவது வேதனை

தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதுல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலக்கட்டத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது.

வீடியோ கான்பிரன்ஸிங்

வீடியோ கான்பிரன்ஸிங்

ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

மரணவாக்குமூலம்

மரணவாக்குமூலம்

'தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை' என்றே செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரணவாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள், அனல் பறக்க விவாதிப்பார்கள்.

வாழ்நாள் தண்டனை

வாழ்நாள் தண்டனை

நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்வி முறையில், இனி பெற்றோர்களும் ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்.

தேர்வு தீர்மானிக்கக்கூடாது

தேர்வு தீர்மானிக்கக்கூடாது

நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த நியாமற்ற தேர்வுகளுக்கு அவர்களை தயார்படுத்த துணைநிற்பது போலவே மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம் உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.

பலியிட நீட் ஆயுதம்

பலியிட நீட் ஆயுதம்

மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே கணிக்கையாக கேட்டார்கள். நவீன கால துரோணகர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நீருபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.

ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்

ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்

ஒரே நாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களை கொள்று இருக்கிறது. இன்று நடந்தே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்" வேதனையுடன் சூர்யா" இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

English summary
actor suriya about 3 students suicide over neet exam fear: he said 'My heart goes out to the three families..! Can't imagine their pain'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X