"ஊட்டிவிடுங்க".. ஆர்.எஸ். பாரதியின் வீட்டிற்குள் நுழைந்து.. தோள் மீது கையை போட்டு.. கலக்கல் ஸ்டாலின்
சென்னை: ஆர்எஸ் பாரதியின் வீட்டிற்குள், அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நுழைந்து, கொஞ்ச நேரத்தில், அனைவரையும் திக்குமுக்காட வைத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
Recommended Video
ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று, அண்ணா அறிவாலயத்தில், திமுகவின் அமைப்புச் செயலாளராக இருப்பவர்கள் தேசியக் கொடி ஏற்றி வருகின்றனர்..
கடந்த ஆண்டும், சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடியேற்றினார்.
கோட்டையில் ஸ்டாலின்.. அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றும் ஆர்.எஸ்.பாரதி.. திமுக வெளியிட்ட அறிவிப்பு!

அண்ணா அறிவாலயம்
இந்நிலையில், இந்த வருடமும் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடியேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டது.. முதல்வர் கோட்டையில் கொடியேற்றி, சிறப்புரையாற்றினார்.. சுதந்திர தின விழாவை முடித்துக் கொண்டு நேராக ஆர்எஸ் பாரதியின் வீட்டுக்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

சர்ப்ரைஸ்
இன்று ஆர்.எஸ்.பாரதியின் பவள விழா என்பதால், அவரை நேரில் சென்று வாழ்த்தினார்... அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கேஎன் நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, எம்பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் தயாநிதிமாறன், எம்பி., பொதுப்பணித் துறை அமைச்சர் எவ வேலு, கழக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் எம்பியும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன், உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

தோள் மீது கை போட்டார்
ஆர்எஸ் பாரதிக்கு இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் முதல்வர்.. அவரை இன்முகத்துடன் ஆர்எஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.. ஆர்எஸ் பாரதியின் கைகளை குலுக்கி வாழ்த்து சொன்ன முதல்வர், டக்கென அவரது தோளில் கை போட்டுக் கொண்டார்.. அப்போது புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.. பிறகு, ஆர்எஸ் பாரதிக்கு மஞ்சள் கலரில் பொன்னாடையை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுப் பொருளையும் தந்தார் ஸ்டாலின்..

ஊட்டுங்க
பிறகு, ஆர்எஸ் பாரதி கேக் வெட்டினார்.. உடனே ஸ்டாலின், அந்த கேக்கில் இருந்து சிறிதளவு எடுத்து, ஆர்எஸ் பாரதிக்கு ஊட்டிவிட்டார்.. அப்போது ஆர்எஸ் பாரதி கேக் எடுத்து முதல்வருக்கு தர போனார்.. அதற்கு ஸ்டாலின், "அந்த கேக்கை எனக்கு நீங்களே ஊட்டி விடுங்க" என்று சொன்னதும், இதை ஆர்எஸ் பாரதி எதிர்பார்க்கவில்லை.. பிறகு ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி விட்டதும், அனைவரும் அங்கே கைகளை தட்டினார்கள்.. சிறிது நேரம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்துவிட்டு, முதல்வர், அமைச்சர்களுடன் அங்கிருந்து கிளம்பி சென்றார். முதல்வரின் இந்த செயல் திமுகவினரிடம் ஆச்சரியத்தையும், பெருமிதத்தையும் உண்டுபண்ணி வருகிறது.