ஜோதிகா மகளுக்கு இப்படி ஒரு திறமையா? சூர்யாவுக்கு பெருமை தாங்கல போங்க! சிவக்குமார் வம்சமாச்சே!
சென்னை: சூர்யா ஜோதிகாவின் மகளான தியா பள்ளி படிப்பை முடித்து பட்டம் பெற்றிருக்கிறார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இந்த நிலையில் தியா அடுத்ததாக படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதில் தனது தாய் ஜோதிகாவையே முதன்மை பாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் என்றும் 16 மார்க்கண்டேயன் என்றால் அது நடிகர் சிவகுமார் தான். முருகன் என்றால் அழகு, திரைத் துறையில் முருகன் என்றால் சிவக்குமார் என சொல்வார்கள். அந்த அளவுக்கு முருகனின் வேடம் கன கச்சிதமாக சிவக்குமாருக்கு பொருந்தி போகும்.
நடிப்பு மட்டுமல்லாது ஓவியம், ஆன்மீகம், மேடைப் பேச்சு என பல துறைகளில் கலக்குபவர் சிவகுமார். எந்த வித தீய பழக்கங்களும் இல்லாமல் இன்று வரை இளமையோடு வாழ்பவர். சிவகுமாரைப் போலவே அவரது மகன்களும் தொடர்ந்து திரை துறையில் பயணித்து வருகின்றனர்.

மகன் சூர்யாவும் கார்த்தியும் முன்னணி நாயகர்களாக வலம் வருகின்றனர். அவரது மருமகளும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் திரைத்துறையில் நாயகியாக கலக்கி வருபவர். திருமணத்திற்கு பின்பு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை நடித்து வருகிறார். சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு தேவ், தியா ஆகிய குழந்தைகள் இருக்கின்றனர்.
தற்போது பள்ளி படிப்பை முடித்ததோடு தனது பட்டத்தையும் பெற்றார் தியா. இதை அடுத்து அந்த புகைப்படங்களை சூர்யா ஜோதிகா சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தியா தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்.
அதாவது அவர் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதில் ஜோதிகாவையே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக இது இருக்கும் எனவும், படத்தில் பெண் டெக்னீசியன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தியா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்துக்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மேலும் கதையை தயாரிக்கும் போதே தன்னுடைய தாய் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்பதில் தியா உறுதியாக இருந்ததாகவும், சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. தியா திடீரென திரைத் துறைக்கு வந்தவர் அல்ல பள்ளியில் படிக்கும் போதே ஆவணப்படம் ஒன்றினை எடுத்து விருது பெற்றவர். லீடிங் லைட் என்ற அந்த ஆவணப் படம் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் விருது உள்ளிட்டவற்றை பெற்றுத் தந்தது. தற்போது முதல் தலைமுறையாக சிவகுமார், இரண்டாவது தலைமுறையாக சூர்யா, திரைத் துறையில் இருக்கும் நிலையில் மூன்றாவது தலைமுறையாக அவரது மகள் தியா களமிறங்குகிறார். இதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழில் ஜோதிகா நடித்த ராட்சசி, செக்கச் சிவந்த வானம் ஆகியவை நல்ல வரவேற்பு பெற்றன. தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான காதல் தி கோர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களில் நடிக்க கதை கேட்டு வரும் அவர் தனது மகளின் கதைக்கும் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications