சிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுக... வைரமுத்து மீது எஸ்.வி. சேகர் பாய்ச்சல்
சென்னை: சிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுகதான் என்று கவிஞர் வைரமுத்துவுக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி. சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லி வன்முறைகள் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை நேற்று வெளியிட்டிருந்தார். அதில்,

எதிராக வாக்களித்தவர்க்கும்
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.
என்று வைரமுத்து கூறியிருந்தார். இதற்கு ட்விட்டரில் பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து பதிவிட்டிருந்தனர். @dvenkat71 என்ற ட்வீட்டிஸ்ட், திமுகவினர் டெல்லி வன்முறையில் இஸ்லாமியர் மட்டுமே தாக்கப்பட்டார்கள் என்பது போலப் பரப்புகிறார்கள். இந்துக்கள், இஸ்லாமியர் ,காவல்துறையினர் என்று அனைவர் மீதும் நடந்துள்ளது. வன்முறையை வைத்து இஸ்லாமியரை மேலும் தூண்டி அரசியல் லாபம் தேடுகிறது திமுக. மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.என கூறியிருந்தார்.
@saravananpmk4 என்ற பதிவர், மத்திய அரசு பலமுறை தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது, காங்கிரஸ் திமுக போன்ற கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்வது தான் மிகவும் வேதனை! மக்கள் முன்பைவிட மிகவும் விழிப்புடன் உள்ளார்கள் இந்த விழிப்புணர்வு வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என பதிவிட்டிருந்தார். அதே நேரத்தில் வைரமுத்துவின் கருத்தை ஆதரித்தும் சிலர் பதிவிட்டிருந்தனர்.
@Kaaraimaindhen என்ற ட்வீட்டிஸ்ட்,
திலீபனின் கொலையோடு
மறித்துப் போனது அகிம்சை
அதை கொன்று தொலைத்தது
காந்திய பேசும் இந்தியம்
வாழ்வுரிமை நியாயம் கேட்டு
உண்ணா நோன்பு இருந்தவனை
சாக பார்த்தது
கொலை என்றால்
மிகை என்பாயோ நீ!
திலீபன் முதல்
இன்று வரை
இத்தனை சாட்சிகள்
நீளும் போது
என்று கொதித்து பதிவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்துவுக்கு இன்று அளித்த பதில்:
ஆதரித்து வாக்களித்தவருக்கு நன்மை பல செய்யாவிடினும் நெஞ்சில் வன்மத்துடன் சிறுபான்மைக்கு அச்ச விதை விதைத்து அதை ஆலமரமாக மாற்றிய உங்களின் திமுகவிடம் சொல்ல வேண்டியது இந்த அறிவுரை. வினை விதைத்தவன் வினை அறுப்பான். இதையும் சொல்லுங்கள். @ThanthiTV @polimernews @rangats @SVESHEKHER https://t.co/pJFZYbzuC9
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) February 28, 2020
ஆதரித்து வாக்களித்தவருக்கு நன்மை பல செய்யாவிடினும் நெஞ்சில் வன்மத்துடன் சிறுபான்மைக்கு அச்ச விதை விதைத்து அதை ஆலமரமாக மாற்றிய உங்களின் திமுகவிடம் சொல்ல வேண்டியது இந்த அறிவுரை. வினை விதைத்தவன் வினை அறுப்பான். இதையும் சொல்லுங்கள்.
Recommended Video
இவ்வாறு எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications