Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கென்னமோ அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் ஏதோ சண்டையா இருக்குமோனு தோன்றுது.. டிகேஎஸ் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்த போது பாதுகாப்பு குளறுபடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என கூறியதை பார்த்தால் அவருக்கு அமித்ஷாவுடன் ஏதேனும் சண்டை இருப்பது போல் தெரிகிறது என திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதன் துவக்க விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. முதல்முறையாக உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிகழ்ந்ததால் சென்னையே விழாக்கோலம் பூண்டது.

இந்த தொடக்க விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தார். அவர் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார். அவருடைய அங்கவஸ்திரம் செஸ் கட்டங்களை போல் கருப்பு, வெள்ளையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மெட்டல் டிடெக்டர்

மெட்டல் டிடெக்டர்

இந்த விழாவின் போதுதான் மெட்டல் டிடெக்டர் வேலை செய்யவில்லை என்றும் பிரதமர் நிகழ்ச்சியில் தமிழக காவல் துறை பாதுகாப்பு குறைப்பாட்டை செய்துள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். நேற்றைய தினம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியிருப்பதாவது: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்த போது அவருக்கு பாதுகாப்பு சரியாக வழங்கப்படவில்லை. அந்த விழாவில் போலீஸார் வைத்திருந்த மெட்டல் டிடெக்டர்கள் வேலை செய்யவில்லை. இதுகுறித்து பிரதமர் மோடி சென்னையிலிருந்து மோடி திரும்பியதும் மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது என்றார்.

டிஜிபி சைலேந்திர பாபு பதிலடி

டிஜிபி சைலேந்திர பாபு பதிலடி

இந்த நிலையில் இதுகுறித்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்த போது எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை. நேரு உள் விளையாட்டரங்கில் சரியான முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் காவல் துறைக்கு வழங்கும் உபகரணங்கள் தரமானவை. மற்ற மாநிலங்கள் தமிழகத்திடம் உபகரணங்களை கேட்டு வாங்கும் அளவுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்டவை என்றார்.

டிகேஸ் இளங்கோவன் பதிலடி

டிகேஸ் இளங்கோவன் பதிலடி

இந்த நிலையில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூறியிருப்பதாவது: பொதுவாக பிரதமர் வருகையின் போது அவருடைய பாதுகாப்பு தொடர்பாக அவருடைய பாதுகாப்பு அதிகாரிகளே ஏற்றுக் கொள்வார்கள். மாநில காவல் துறைக்கு எந்த பணியும் இருக்காது. அவ்வாறு பாதுகாப்பை எடுத்துக் கொண்டால் முதல்வர் கூட உள்ளே நுழைய முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

 அமித்ஷாவுடன் சண்டையா

அமித்ஷாவுடன் சண்டையா

எனக்கு என்ன புரியவில்லை என்றால், அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் ஏதேனும் தகராறா என தெரியவில்லை. ஏனென்றால் அமித்ஷாதான் உள்துறை அமைச்சர். அவர் மீதுள்ள கோபத்தை அண்ணாமலை இங்கே காட்டுகிறாரா என்றும் தெரியவில்லை. இன்னொன்று அண்ணாமலை ஒரு காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர். இவருக்கு இந்த அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை என்றால் இவர் என்ன பணியாற்றினார் என்பது கூட எனக்கு புரியவில்லை.

லாஜிக்கே இல்லை

லாஜிக்கே இல்லை

தாமதமாக அண்ணாமலை கேட்பது ஒரு புறமிருந்தாலும், இந்த கேள்வியே எழக் கூடாது. பிரதமர் வருகிறார் என்றால் டெல்லியிலிருந்தே பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கான பாதுகாப்பு பணிகளை கையில் எடுத்துக் கொள்வர். தமிழக காவல் துறையினரை பிரதமரின் பாதுகாப்பு படையினர் உதவிக்கு பயன்படுத்திக் கொள்வார்களே தவிர, அந்த பாதுகாப்பு அதிகாரிகளை தாண்டி எந்த விஷயமும் நடந்துவிட முடியாது. பிரதமர் நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பாதுகாப்பு அதிகாரிகள் வந்துவிடுவார்கள். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை சோதனை செய்து அதில் ஏதேனும் சரியில்லை என்றால் உடனே மாற்றிவிடுவார்கள், இதுதான் அவர்களுடைய பணி. எனவே அண்ணாமலை பிரதமர் பாதுகாப்பு பணி குறித்து குற்றம் சொல்கிறார் என்றால் அவர் மத்திய உள்துறை அமைச்சகத்தையே குற்றம் சொல்கிறார் என்றுதான் அர்த்தம்.

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கம் இல்லை, காசி தமிழ் சங்கமம். காசி தமிழ் சங்கம் என்றால் அங்கே தமிழ் வளர்க்க வேண்டும். இது சங்கமம், அதாவது தமிழர்கள் ஒன்று கூடி கலைவதுதான் (நீங்கள் பெயரையே தவறாக கூறுகிறார்கள் என செய்தியாளரை பார்த்து சொல்கிறார்). அந்த காலத்தில் ராமேஸ்வரத்திலிருந்து காசி யாத்திரை செல்வார்கள். ஆனால் தற்போது அந்த யாத்திரையை காட்டிலும் திருப்பதிக்கும், சபரிமலைக்கும்தான் மக்கள் செல்கிறார்கள். எனவே திருப்பதி தமிழ் சங்கமம், சபரிமலை தமிழ் சங்கமம் என வைப்பதே சிறந்தது. ஏதோ தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருப்பதை போல் மத்திய அரசு போலியாக காட்டி கொள்கிறார்கள். இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+