உங்க சேட்டைக்கு அளவே இல்லையா? ஸ்கையில் வந்த கேட்சை பிடித்த SKY யாதவ்! நெல்லை போஸ்டரை பாத்தீங்களா?
சென்னை: சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து இந்தியா திரும்பிய அவர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அபாரமான கேட்ச் பிடித்து வெற்றிக்கு உதவியதாக சூரியகுமார் யாதவுக்கு நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றுள்ளது.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு போட்டியில் கூட தோற்காத தென்னாப்பிரிக்காவை அதே போல தொடர்ந்து வெற்றியை சந்தித்து வந்த இந்திய அணி தோற்கடித்து கோப்பையை வென்று இருக்கிறது.

இறுதியாக டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் விராட் கோலி அக்சர் பட்டேல் சிறப்பாக ஆடி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். தொடர்ந்து இந்தியா வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, அர்ஷதிப் சிங், பும்ரா ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர்.
குறிப்பாக கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை மில்லர் விளாச சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் தான் ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது. டேவிட் மில்லர் இருந்திருந்தால் ஒரு வேளை தென்னாபிரிக்காவுக்கு கோப்பை சென்றிருக்கலாம். ஆனால் ஸ்ட்ரெய்ட் லைனுக்கு அருகே சிக்சர் லைனைத் தாண்டி விழச் சென்ற பந்தை எல்லைக் கோட்டருகே பிடித்த சூர்யகுமார் யாதவ். அதற்கு பிறகு பந்தை தூக்கி வீசிவிட்டு 6 லைனை தாண்டி சென்றார்.
பிறகு மீண்டும் மைதானத்திற்குள் வந்து பந்தை பிடித்து மில்லரை வெளியேற்றினார். கடந்த உலகக் கோப்பைகளில் எப்படி கபில்தேவ், ஸ்ரீசாந்த் கேட்ச்களைப் பிடித்து இந்தியாவுக்கு கோப்பைகளை பெற்றுக் கொடுத்தார்களோ அதே போல் தான் சூர்ய குமாரின் கேட்ச்சும் இரண்டாவது t20 உலக கோப்பையை வெல்ல உதவியது.
இதனை தொடர்ந்து கோப்பையை வென்று, மேற்கு இந்திய தீவுகளில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா வந்த நிலையில், மும்பையில் இந்திய அணி வீரர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த பேருந்தில் பேரணியாகச் சென்ற இந்திய வீரர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்றாக திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். அதுமட்டுமல்லாமல் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட வெற்றி விழா நிகழ்ச்சியிலும் ரசிகர்கள் கலந்து கொண்டு இந்திய அணி வீரர்களை வாழ்த்தினர்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பிரம்மாண்ட பேனர் கட்டவுட் என ஆங்காங்கே வைத்து பட்டையை கிளப்பி வருகின்றனர். இந்த நிலையில் இக்கட்டான சூழலில் இருந்த இந்தியாவை அபாரமான கேட்ச் பிடித்து வெற்றி பெற வைத்ததாக சூரியகுமார் யாதவுக்கு நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட யாதவ சங்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த போஸ்டரில்,"ஒரே கேட்சில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி உலகை கோப்பையை பெற்று தந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த திரு.சூரியகுமார் யாதவ் அவர்கள் மேலும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துகிறோம்.. இவன் யாதவர் சமுதாயம் திருநெல்வேலி மாவட்டம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றை புகைப்படம் எடுத்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications