தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில்கள் மேலும் ரத்து... இரவில் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 12-ந் தேதி அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், தாம்பரத்திலிருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு மின்சார ரயில்தான் முக்கியமான போக்குவரத்து ஆகும். சென்னை மாநகரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியை இணைக்கும் இந்த மின்சார ரயில் வழித்தடம் ஒரே ஒரு நாள் செயல்படாமல் போனால் மொத்த சென்னையும் அடியோடு முடங்கிவிடும்..

Tambaram Chengalpattu Electric Train Further Cancelled Important Announcement for Night Travelers

ஏனெனில் அந்த அளவிற்கு பயணிகள் அதிக அளவில் செல்லும் வழித்தடம் ஆகும். சென்னையின் பிரதான மின்சார ரயில் வழித்தடம் என்பதும் இதுதான்.. இந்த வழித்தடத்தில் அதிகாலை 4 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை மின்சார ரயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது இரவு நேர ரயில்கள் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இரவு நேர ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்து. இது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10, 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து மேலும் நீட்டிக்கப்படுகிறது

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 12-ந் தேதி அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், தாம்பரத்திலிருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் ரெயிலும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் ரயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை அதிகாலை 3.50, 4.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை இரவு 9.45, 10.10, 11.15 மணிக்கு வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், இரவு 10.20, 11 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் பகுதி நேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+