கவர்ச்சி உடையில் வந்து..விபூதி அடித்த இளம் பெண்..கம்பி நீட்டிய காதலன்..சுத்துப்போட்ட தாம்பரம் மக்கள்
சென்னை: சென்னை தாம்பரம் பகுதிக்கு வசீகரிக்கும் வகையில் உடை அணிந்து வரும் இளம் பெண் கடைக்கார்களை நம்ப வைக்கும் வகையில் சாதுர்யமாக பேச்சுக்கொடுத்து அசந்த நேரத்தில் நூதன முறையில் ஏமாற்றிவிட்டு, காதலனுடன் பைக்கில் கம்பி நீட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அவரை கடைக்காரர் ஒருவர் கையும் களவுமாக பிடித்துக் கொடுத்துள்ளார்.
நீங்கள் இப்படியும் ஏமாறலாம் என்று போலீசார் தான் இனி அறிவிக்க வேண்டும்... கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பேமெண்ட சிஸ்டம்கள் மக்களுக்கும் கடைக்காரர்களுக்கும் வரம் தான். ஆனால் அதனை சாபம் என்று சொல்ல வைக்கும் வகையில் அவ்வப்போது சிலர் செயல்படவும் செய்கிறார்கள். கடைக்கார்களிடம் பழைய ஸ்கிரீன்ஷாட்களை காட்டி பணம் போட்டுவிட்டதாக ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகிறவர்கள் இருக்கிறார்கள்.

வயதானவர்கள், மற்றும் வேலையில் மும்முரமாக இருப்பவர்களிடம் இப்படி ஏமாற்றுவது நடந்து வருகிறது. இதையே வேலையாக வைத்திருக்கிறார் இளம் பெண் ஒருவர். காதலனுடன் வரும் அந்த இளம் பெண், தாம்பரம் பகுதிகளில் உள்ள கடைகளில் ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். மார்டனாக டிப்டாப் ஆக உடை அணிந்து சாதுர்யமாக பேசுவதால் அந்த பெண் பணம் அனுப்பி இருப்பார் என்று நம்பி கடைக்கார்கள் ஏமாந்து வந்தார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில்,தாம்பரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளுக்கு கவர்ச்சியாக உடை அணிந்த படி இளம்பெண் ஒருவர் வேகமாக வருவார். தனக்கு உடனடி மருத்துவத் தேவை இருப்பதாக கூறி, தான் சொல்லும் எண்ணுக்கு அவசரமாக பணம் பரிவர்த்தனை செய்யுமாறு கூறுவார்.
அதன்படி கடைக்காரர் பணம் அனுப்பிய பின்னர், அதற்கான பணத்தை ரொக்கமாக கொடுக்காமல் 'பேட்டி எம்' மூலம் 'கியூ.ஆர். ஸ்கேனர்' பயன்படுத்தி அனுப்புவதாக கூறுவார். அந்த நிமிடம் கடைக்காரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பேசிவிட்டு, பணத்தை அனுப்பி விட்டதாக கூறி செல்போனில் போலியாக எடுத்து வைத்து இருக்கும் பழைய 'ஸ்கிரீன் சாட்டை' காண்பித்துவிட்டு வெளியேறுவார். அங்கே தயாராக நிற்கும் காதலனின் இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில்தப்பிச்சென்று விடுவார். இப்படி அடிக்கடி நடந்து வந்தது.
இதுபற்றி கடைகளில் வந்த புகார்களின் அடிப்படையில், கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை தேடி வந்தோம்.
இந்த நிலையில் தாம்பரத்தில் ஒரு செல்போன் கடையில் அந்த இளம்பெண், இதே பாணியில் மோசடி செய்ய முயற்சித்தார் சுதாரித்து கொண்ட கடைக்காரர், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் இளம்பெண்ணை கையும் களவுமாக மடக்கிப்பிடித்தார். பின்னர் சேலையூர் போலீசில் ஒப்படைத்தார்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், கவர்ச்சியாக உடை அணிந்து ஏமாற்றி வந்த பெண்ணின் பெயர் ஷெரில்கன்சால்வெஸ் (வயது 20) என்பதும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யன்சேரி பகுதியில் சகோதரனுடன் தங்கி இருக்கிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் சேலத்தில் இப்படி நூதன மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்திருக்கிறார். அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே அந்த இளம் பெண்ணிடம் ஏமாந்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், உடந்தையாக இருந்த இளம்பெண்ணின் காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications