Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’அவங்க’ மனசு வச்சா போதும்..உடையும் திமுக வாக்குகள்? குறுக்கே வந்த விஜய்.. மல்லுக்கு நிற்கும் சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிறுபான்மை வாக்குகள் யாருக்கு செல்ல போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரையிலான காலத்தில் திமுகவே சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்து வந்தது. தற்போது தமிழக வெற்றி கழகம் சிறுபான்மை வாக்குகளில் ஒரு பகுதியை அறுவடை செய்யலாம் என சொல்லப்படும் நிலையில், தன் பங்குக்கு களத்தில் குறித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் பிப்ரவரி அல்லது மார்ச்சிலேயே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி தமிழகத்தில் நிலவுகிறது.

திமுகவை பொருத்தவரை கூட்டணியை இறுதி செய்து விட்டது. இன்னும் சில நாட்களில் அதிமுகவும் தனது கூட்டணியை இறுதி செய்யலாம் என சொல்லப்படுகிறது. வழக்கம்போல் தனித்து தான் போட்டி என அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளார் சீமான்.

DMK TVK NTK

2026 தமிழக தேர்தல்

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி தொடர்பான நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என சொல்லப்படும் நிலையில், அது நடக்குமா அல்லது தவெக தனித்துப் போட்டியிடுமா என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சிறுபான்மையின வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை பெரும்பாலும் திமுகவை சிறுபான்மையின வாக்குகளை அதிகமாக அறுவடை செய்து வந்தது. இந்த தேர்தலில் அது சற்றே மாற்றத்திற்கு உட்படலாம் என சொல்லப்படுகிறது. காரணம் நடிகர் விஜயின் வரவு.

சிறுபான்மை வாக்கு

தமிழக அரசியலில் சிறுபான்மை வாக்குகள் எப்போதும் பெரிய தாக்கம் உண்டு. குறிப்பாக கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் சேர்த்து சுமார் 12 சதவீதம் இருக்கும் நிலையில், இந்த வாக்குகளைப் பெறுவதற்கான போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சிறுபான்மை வாக்குகள் உள்ளன. அதிலும் சுமார் 50 தொகுதிகளில் அவர்கள் வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு இருக்கின்றன.

அறுவடை செய்த திமுக

பல ஆண்டுகளாக சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் திமுக மற்றும் காங்கிரஸுக்கு சென்றன. அதன் பலனாக இந்த கூட்டணி பல தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனால் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அவர் சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற முயன்று, அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் ஜெயலலிதாவும் சிறுபான்மையினருக்கான பல நலத்திட்டங்களை அறிவித்து அவர்களின் ஆதரவை தக்க வைத்தார். முக்கியமாக பாஜகவுடன் அவர் கூட்டணி வைக்காததால், சிறுபான்மையினர் அதிமுகவிற்கு ஆதரவாக இருந்தனர்.

ஜெயலலிதா

ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் சிஏஏ, முத்தலாக், வக்பு சட்ட திருத்தம் போன்ற விவகாரங்களில் அதிமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே சமயம் திமுக இந்த சட்டங்களுக்கு எதிராக வலுவான நிலைப்பாடு எடுத்தது. இதன் விளைவாக சிறுபான்மை வாக்குகள் மெல்ல திமுகவுக்கு நகர ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக 2019 முதல் திமுக பல தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது.

விஜய் அரசியல்

இப்போது இந்த நிலையை மாற்ற தவெகவும், நாம் தமிழர் கட்சியும் தீவிரமாக முயற்சி செய்கின்றன. விஜய் அரசியலுக்குவந்த முதல் நாளிலிருந்தே பாஜகவைக் கொள்கை எதிரி என கூறி வருகிறார். மேலும் சிஏஏ, வக்பு சட்ட திருத்தம் போன்றவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல் விஜய் கிறிஸ்தவர் என்பதால், அவருக்கு கிறிஸ்தவ வாக்குகள் சேரலாம் என அவரது கட்சி நம்பிக்கையுடன் இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற பகுதிகளில் கட்சி நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளன.

நாம் தமிழர் சீமான்

ஆனால் விஜய் பாஜகவைக் கட்டாயம் அதிகமாக விமர்சிப்பதில்லை என ஒரு தரப்பு குற்றம் சாட்டுகிறது. சில முக்கிய பிரச்சனைகளில் அவர் மவுனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி சிறுபான்மை வாக்குகளை தனித்துவமான கோணத்தில் அணுகுகிறது. இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்கள் சிறுபான்மை அல்ல, மொழியால் பெரும்பான்மை என சீமான் வலியுறுத்துகிறார். மேலும் இந்த சமுதாயத்தினரை கட்சியில் அதிக அளவில் பொறுப்புப் பதவிகளில் அமர்த்தி வருகிறார். பெண்களுக்கும் அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சிறுபான்மை வாக்கு வங்கி

இந்த சூழலில் "சிறுபான்மை வாக்குகள் முழுவதும் எங்களுக்கே வரும்" என்ற திமுகவின் நம்பிக்கைக்கு இப்போது சவால் எழுந்துள்ளது. ஒருபுறம் விஜயின் தவெக, மறுபுறம் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகிய இரண்டும் இந்த வாக்குகளை ஈர்க்க முயற்சி செய்கின்றன. அதனால் திமுகவும் சிறுபான்மையினரை கவர இன்னும் பல திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை அறிவிக்கும்ம் வாய்ப்பும் இருக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினரின் ஆதரவை யார் அதிகமாகப் பெறுவார்கள் என்பது தான் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+