ஓமிக்ரான் பாதிப்பில் தமிழகத்திற்கு 3வது இடம் - எங்கெங்கு எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா?
தமிழகத்தில் 34 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகபட்சமாகசென்னையில் 26 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: இந்திய அளவில் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் 26 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
டெல்டாவின் பிடியில் இருந்து இந்தியா மீண்ட நிலையில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாட்டிற்குள் நுழைந்து விட்டது. இந்தியா முழுவதும் இதுவரை 260க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 34பேருக்கு ஓமிக்ரான் உறுதியாகியுள்ளது.
தெலுங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளா 15, குஜராத் 14, ஜம்மு - காஷ்மீர் 3, ஒடிசா 3, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரப் பிரதேசம் 2, ஒடிசா 2 , சண்டிகர், லடாக், உத்தராகண்ட் ,மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 பேர் ஓமிக்ரானால் பாதிப்பு
தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இதன்மூலம் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.புதிதாக ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 33 பேரில் 3 பேர் தமிழ்நாட்டிலேயே இருப்பவர்கள், ஒருவர் கேரளாவில் இருந்து திரும்பியவர் ஆவார். 4 பேரை தவிர எஞ்சியவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்த நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிப்பு
வெளிநாடுகளில் இருந்து வந்த 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 114 பேரில் 57 பேருக்கு எஸ்.ஜீன் மாற்றம் ஏற்பட்டது. 57 பேருடன் தொடர்பில் இருந்த 3 பேர் என மொத்தம் 60 பேருக்கு ஓமிக்ரான் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவில் 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 33 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.

எங்கெங்கு எவ்வளவு
நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு முதலில ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒமிக்ரான் தொற்று ஏற்பட்ட 34 பேருக்கும் முதல்நிலை பாதிப்பு மட்டுமே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 26 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video

பாதுகாப்பு அவசியம்
விமான நிலையங்களை கண்காணிக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவல் மிக வேகமாக இருக்கும் ஆனால் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மக்கள் அச்சப்படாமல் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிவதோடு தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications