என்ன இவங்கல்லாம் பாஜகவில் சேரப் போறாங்களா? பிளான் ‘பி’ தயார் செய்யும் அண்ணாமலை? யார் யார் தெரியுமா.?

Subscribe to Oneindia Tamil

சென்னை : திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தவாக நிறுவனர் வேலுமுருகனின் முன்னாள் மனைவி காயத்ரி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரமுகர் மீது அதிருப்தியில் இருக்கும் உறவினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை கட்சியில் சேர்ந்து அவர்களுக்கு நெருக்கடி தரும் புது அஸ்திரத்தை தமிழக பாஜக எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பின் வேல்முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவரும் மத்திய இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

பொன்.ராதாகிருஷ்ணன் இல கணேசன் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகள் இருந்தும் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே கட்சியில் இணைந்து உடனடியாக துணைத்தலைவராக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை ஐபிஎஸ் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாஜக அண்ணமலை

பாஜக அண்ணமலை

அதிரடிப் பேச்சு, ஆணித்தரமான அரசியல் என தொடர்ந்து ஆளும் திமுக மீது பல அதிரடி குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த அண்ணாமலை தொடர்ந்து நாள்தோறும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட ஆளுங்கட்சியான திமுகவை அதிரடி பேச்சுகள் மற்றும் அறிக்கைகள் மூலம் ஏதாவது ஒரு வகையில் விமர்சனம் செய்து வருகிறார் அண்ணாமலை. அதற்கேற்றார் போல் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தருமபுரம் ஆதீனம் பிரச்சனை, மதமாற்ற குற்றச்சாட்டுகள் என அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி பாஜகவின் இருப்பை உறுதி செய்தார் அண்ணாமலை.

அதிரடி திட்டம்

அதிரடி திட்டம்

குறிப்பாக கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் இளைஞர்கள் அதிகளவில் கட்சிக்கு கொண்டுவருவதற்காக கொடுக்கப்பட்ட அசைன்மெண்டை பக்காவாக முடித்துள்ள அண்ணாமலை. குறிப்பாக கட்சிக்கு புதிய முகங்களையும் ஏற்கனவே அரசியலில் ஊறித் திளைத்தவர்களையும் கொண்டுவருவது பாஜக தலைவர் அண்ணாமலையின் முக்கிய அசைன்மென்ட் ஆக உள்ளது. அந்த வகையில் பலர் அடுத்தடுத்து கட்சியில் சேர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்.

கட்சியில் சேர்ப்பு

கட்சியில் சேர்ப்பு

அந்த வகையில், திமுகவின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவராகக் கருதப்பட்ட திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா யாரும் எதிர்பாராதவிதமாக திமுகவில் சேர்ந்தார். ஆனால் அவருக்கும் அவரது தந்தைக்கும் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திமுகவின் தூண்களில் ஒருவரும் நீண்டகாலமாக பொதுச் செயலாளராக பணியாற்றி மறைந்த பேராசிரியர் அன்பழகனின் பேரனான அன்புகிரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

முக்கிய பொறுப்பாளர்கள்

முக்கிய பொறுப்பாளர்கள்

இது மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அல்லது முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்பில் இல்லாத உறவினர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களை கட்சியில் இணைத்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டத்தை அண்ணாமலை எடுத்துள்ளதாகவும் இதற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தான் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது

பிரதான கட்சிகள் அதிர்ச்சி

பிரதான கட்சிகள் அதிர்ச்சி

இதுமட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து திமுகவுக்கு வந்த நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் அமைச்சர்கள் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் நிர்வாகிகளை அழைத்து வரும் பொறுப்பு பாஜகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தினமும் அதில் உள்ள நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பாஜகவுக்கு அழைத்து வர திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. திமுக மட்டுமின்றி பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிர்வாகிகளையும் பாஜகவுக்கு அளித்து வரும் வேலை நடந்து வருவதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+