சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தெய்வப் புலவர்".. முழு காவி உடையில் திருவள்ளுவர்.. பாஜக அண்ணாமலை சொன்ன வாழ்த்து! கவனிச்சீங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுக்க திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செய்து வருகின்றனர். வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மரியாதை செய்தார்.

திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை கடற்கரை சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார்.

பெங்களூர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை.. ஒற்றுமையை காட்டிய சித்தராமையா! கர்நாடகாவில் களைகட்டிய பொங்கல் பெங்களூர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை.. ஒற்றுமையை காட்டிய சித்தராமையா! கர்நாடகாவில் களைகட்டிய பொங்கல்

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள், என்று குறிப்பிட்டு உள்ளார். பாஜக தலைவர் பலரும் திருவள்ளுவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை

அண்ணாமலை

இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள வாழ்த்தில், சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள். என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் இதற்காக பயன்படுத்தி இருக்கும் புகைப்படம்தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்த்து செய்தி

வாழ்த்து செய்தி

பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்து செய்தியில் காவி திருவள்ளுவர் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளார். இத்தனை காலம் தமிழ்நாட்டில் திருவள்ளுவர் மதமற்றவராக எல்லா மதத்திற்கும் பொதுவானவராக பார்க்கப்பட்டு வந்தார். அதனாலேயே அவர் எழுதியதும் பொதுமறை என்று புகழப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அவருக்கு காவி உடையை அணிவித்து உள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றனர். பாஜக தலைவர்கள் கடந்த சில வருடங்களாக காவி திருவள்ளுவர் சிலையை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அண்ணாமலையும் அதே புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளது.

வழக்கமான தோற்றம்

வழக்கமான தோற்றம்

திருவள்ளுவரின் வழக்கமான தோற்றத்தை மாற்றி காவி உடை தரித்தவராக தமிழ்நாடு பாஜக தமது சமூக வலைதளப் பக்கங்களில் கடந்த 2020ல்தான் வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் பாஜகவினர் காவி உடை திருவள்ளுவர் படத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் அண்ணாமலையும் இதே புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளார். திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், உலகில் வெகுசில தேசிய இனங்களுக்கு தான் இலக்கிய முகம் தன் அடையாளமாக கிடைக்கும் அப்படி ஒரு பெருமை வள்ளுவர் மூலம் தமிழர்களாகிய நமக்கு வாய்த்தது வள்ளுவருக்கு உருவம் கொடுத்து வரைய சொல்லி, வள்ளுவர் பிறப்பை ஆண்டின் தொடக்கமாக 1972 ல் உத்தரவிட்டு, வள்ளுவர் கோட்டம் தந்து பள்ளிபாடத்தில் குறலினை கட்டாயமாக்கி,
நாட்டின் எல்லை தொடக்கமான குமரியில் வானுயர சிலை அமைத்து வள்ளுவரை நம் இனத்தின் வாழ்வில் அடையாளமாக்கிய கலைஞருக்கும் வள்ளுவர் தினத்தில் நன்றி!!, என்று குறிப்பிட்டு உள்ளார்.

English summary
Tamil Nadu BJP chief Annamalai posts Thiruvalluvar with Safforn shawl, creates controversy .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X