கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பெயர் மாற்றம்.. வீடு கட்ட வழங்கப்படும் நிதி அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிசை வீடுகளில் வசித்து வருவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு கான்கிரீட் வீடுகளை கட்ட அரசு மானியம் வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த மானிய தொகையை ரூ.3.10 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். அதேபோல 'கலைஞர் கனவு இல்ல திட்டம்' என்கிற பெயர், 'வெற்றி வீடு திட்டம்' என மாற்றப்பட்டிருக்கிறது.

புதியதாக அமைந்த தவெக அரசு, தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் வீடு கட்ட வழங்கப்படும் மானியத்தொகை உயர்த்தி வழங்கப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருக்கிறார்.

Free House Scheme

அமைச்சரின் அறிவிப்பு

இது குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் பேசியதாவது, "புதிய மாநில வீட்டுவசதி திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கு முன்னர் வீட்டுவசதி திட்டத்திற்கு பயனாளிகளுக்கு ஒரு வீட்டுக்கு ரூ.3.10 வழங்கப்பட்டிருந்தது. இனி இந்த தொகுதி புதிய திட்டம் மூலம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகள் கட்டி தர ஒப்புதல் வழங்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.

பெயர் மாற்றம்

இதற்கு முன்னர் 'கலைஞர் கனவு இல்லம்' என்கிற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இப்போது பெயரை மாற்றி இத்திட்டத்தின் மீது தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது என்று விமர்சனங்கள் வெடித்திருக்கின்றன.

எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட முன்னோடி திட்டம்தான் இந்த 'கலைஞர் கனவு இல்ல திட்டம்'. கடந்த 2010ல் இந்த திட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. மாநிலம் முழுவதும் 8 லட்சம் குடிசைகள் இருப்பதாகவும், இந்த வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றவும் திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.

மானிய தொகை

கடந்த ஆட்சியில் 2 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஒரு வீட்டிற்கு ரூ.3.10 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இது தவிர ரூ.40000 மதிப்பில் கம்பிகள், சிமென்ட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. மேலும் கழிப்பறை கட்ட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நிதியும், பயனாளிக்கு தேவை எனில் ரூ.1.5 லட்சம் வரை வங்கி கடனும் வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் வீடு

வீடு குறைந்தது 300 சதுரஅடி இருக்க வேண்டும். அதில் சமையலறை, ஹால், கழிவறை இருக்க வேண்டும். வீடுகள் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். சொந்தமாக பட்டா இருந்தால் போதும். இந்த வீடு பெற தகுதியானவர்கள் ஆவார்கள். பட்டா வைத்திருக்கும் இடத்தில் அவர்கள் குடிசை, தகர கொட்டகை வீட்டில் வசித்து வருபவர்களாக இருக்க வேண்டும்.

இருப்பினும், உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக ரூ.3.10 லட்சத்தை வைத்து வீடு கட்ட முடியாத சூழல் இருந்தது. இந்த மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர். இப்படி இருக்கையில் தவெக அரசு தற்போது திட்டத்தின் பெயரை மாற்றி, இதற்கான நிதியை உயர்த்தியிருப்பத கவனம் பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+