முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள்.. இடைத்தேர்தல் அறிவிக்காதது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலும் 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு ஏன் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இப்போது 7 தொகுதிகள் காலியாக இருக்கிறது. முதல்வர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், அதில் அவர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருந்தார். மேலும், பல்வேறு அதிமுக எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

Tamil Nadu By-Election

இரு தொகுதிகளுக்கு மட்டுமே!

இருப்பினும், இன்று காலியாக இருக்கும் அனைத்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19ம் தேதி கடைசி நாளாகும். தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ராஜினாமா

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

காரணம் என்ன

இவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தினால், அரசு பணம் செலவிடப்படும் என்றும் ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன ரீதியான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், அந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த இடைக்கால தடை செப்டம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரு தொகுதிகளுக்கு மட்டுமே!

இந்த தேர்தல் வழக்கு மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாகவே தற்போது 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் வெற்றி தொடர்பான வழக்குகள் முடிந்த பிறகு அல்லது இடைக்கால தடையை நீதிமன்றம் விலக்கிக் கொண்டே பிறகே அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இதன் காரணமாகவே இப்போது இரு தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தேர்தல் அறிவிப்பு விவரம்

செப்டம்பர் 9: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

செப்டம்பர் 16: வேட்புமனு தாக்கல் கடைசி நாள்

செப்டம்பர் 17: வேட்புமனு பரிசீலனை

செப்டம்பர் 19: வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்

அக்டோபர் 6: வாக்குப்பதிவு

அக்டோபர் 9: வாக்கு எண்ணிக்கை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+