முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால் புஸ்ஸாகிப் போனதே.. தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் கிடையாது!
சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட இருக்கிறது; இது தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என வெளியான தகவல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் அமைச்சரவையில் தாங்கள் நீக்கப்படலாம் என அச்சப்பட்ட அமைச்சர்கள் நிம்மதியடைந்துள்ளனர்; அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தவர்கள் காத்திருப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ந் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அமெரிக்காவின் 17 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அமெரிக்கா சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்புகிறார்.

முதல்வர் ஸ்டாலின் தமது அமெரிக்கா பயணத்தின் போது தமிழ்நாட்டில் 500 நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா பயணத்தை முன்னிட்டு தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
தமிழ்நாடு அமைச்சரவையில் சீனியர் உட்பட மொத்தம் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கு பதிலாக 3 புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்கள், திமுக பலவீனமாக உள்ள பகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த 3 புதிய முகங்கள் இடம் பெறுவர் எனவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவை மாற்றம் என்கிற செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் தற்போதைய நிலையில் "இன்று அமைச்சரவை மாற்றம் இல்லை" என்பது உறுதியாகி இருக்கிறது. முதல்வர் அறிவிப்பால் அமைச்சர் பதவி பறிபோகுமோ என பீதியில் இருந்த சில அமைச்சர்கள் நிம்மதி அடைந்திருப்பர்; எதிர்பார்ப்புடன் இருந்த எம்.எல்.ஏக்கள் காத்திருப்பு நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications