முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி...

    சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை தொடங்கிய கூடத்தில் துறைவாரியான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது தவிர குடிநீர் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் விவாதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜுன் 28ம் தேதி வெள்ளிக்கிழமை கூட உள்ளது. சுமார் ஒரு மாதம் நடக்க உள்ள கூட்டத்தொடரில் துறைவாரியாக பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்க எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

    Tamil Nadu Cabinet meeting to be chaired by Chief Minister edappadi Palanisamy

    இந்நிலையில் எதிர்க்கட்சிகள் குடிநீர் தட்டுப்பாடு, கடுமையான வறட்சி தொடர்பாக சட்டப்பேரவையில எதிர்க்கட்சிகள் பல்வேறு கடுமையான கேள்விகளை எழுப்ப காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதேபோல் துறைவாரியான பிரச்னைகளையும் எழுப்பும் திட்டத்தையும் வைத்துள்ளார்கள்.

    இதை சமாளிக்கும் விதமாகவே மேற்கொள்ள வேண்டிய விவாதம் குறித்து ஆலோசனை தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் துறைவாரியாக அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதேபோல் தண்ணீருக்காக சிறப்பு திட்டங்கள் அறிவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுஇருக்கலாம் என தெரிகிறது. என்னென்ன திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன என்பது பற்றி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரியவரும்.

    இது தவிர குடிநீர் பிரச்னை மற்றும் வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிப்பது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+