சிறைச்சாலை சித்ரவதை! மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘ஜெய்பீம்’! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
சென்னை : சிறைச்சாலைச் சித்ரவதையை நீங்கள் சினிமாவில் பார்த்திருப்பீர்கள், ஆனால் நான் அதை உண்மையில் ஓராண்டு காலம் அனுபவித்தவன் எனவும், அதனால் மற்றவர்களைவிட என்னை ஜெய்பீம் படம் என்ன கூடுதலாகப் பாதித்தது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முத்தமிழ்ப் பேரவை 41ஆம் ஆண்டு இசைவிழாவில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," என்னைப் பொறுத்தவரையில், இது ஒரு வித்தியாசமான மேடையாக அமைந்திருக்கிறது. முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதற்குப் பிறகு பங்கெடுக்கும் முதல் இசை மேடையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
நான் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறேன் என்றால், என் வளர்ச்சிக்குப் பின்னால் எத்தனையோ பேருடைய வழிகாட்டுதல் இருந்திருக்கிறது. அதில் நிச்சயமாக நம்முடைய அமிர்தம் அவர்களும் இடம் பெறுகிறார் என்பதை நான் மறக்காமல் சொல்லியாக வேண்டும். அவருடைய அழைப்பை ஏற்று, இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். இந்த முத்தமிழ்ப்பேரவை மட்டுமல்ல, இந்த ராஜரத்தினம் கலையரங்கமும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

‘ஜெய்பீம்' படம்
என்னைப் பொறுத்தவரைக்கும் எல்லோருடைய தோளோடு தோளாக இருந்து உங்களில் ஒருவனாக நான் என்றைக்கும் இருப்பேன் என்ற உணர்வோடு இருக்கக்கூடியவன் நான் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இல்லை என்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். என்னுடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் அவர் இயக்கிய 'ஜெய்பீம்' படம். ஆக, ஞானவேல் அவர்களுக்கு இந்த விருதை இன்றைக்கு நாம் வழங்கியிருக்கிறோம். அவருக்கு நான் விருது அளிப்பதையும் மகிழ்ச்சியாகவே கருதுகிறேன்.

இயக்குனர் ஞானவேல்
'தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஞானவேல் அவர்கள், பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர், பல்வேறு புத்தகங்களை எழுதியவர், மொழிபெயர்ப்பாளர், கடந்த பத்து ஆண்டுகளாக திரைத்துறையில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் பணியாற்றியிருக்கக்கூடியவர்.

நடிகர் சூர்யா
அந்த வரிசையில் அவரது "ஜெய்பீம்" படம் பலரது மனச்சாட்சியை உலுக்கியது. என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா அவர்கள் அந்தப் திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார், அதைப் போய்ப் பார்த்தேன். அந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கு நான் தூங்கவேயில்லை.

சிறைச்சாலைச் சித்ரவதை
சிறைச்சாலைச் சித்ரவதையை நீங்கள் அந்த சினிமாவில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் அதை உண்மையில் அனுபவித்தவன் ஓராண்டு காலம். அதனால், மற்றவர்களைவிட என்னை அந்தப் படம் கூடுதலாகப் பாதித்தது. இளம் வயதில், மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கக்கூடிய ஞானவேல் அவர்களை முத்தமிழ்ப்பேரவையுடன் இணைந்து நானும் உங்கள் அனைவரின் சார்பில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்." என கூறினார்.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications