"ஊரான் வீட்டு நெய்ல.." MLAகளுக்கு காரை கொடுத்த விஜய்.. நிதிசுமை இப்போ என்னாச்சு? நெட்டிசன்கள் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் கார் தரப்படும் என்று முதல்வர் விஜய் இன்று அறிவித்திருந்தார். இதனை பல்வேறு எம்எல்ஏக்களும் வரவேற்று இருந்தனர். அதேநேரம் நெட்டிசன்கள் மாநிலத்தின் நிதிநிலை மோசமாக இருப்பதாக முதல்வர் கூறும் நிலையில், இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், முதல்வரின் பழைய வீடியோவையும் பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், இப்போது பட்ஜெட் மீதான விவாதமும் மானிய கோரிக்கை மீதான விவாதமும் நடந்து வருகிறது. இதில் பல்வேறு சட்டசபை உறுப்பினர்களும் தங்கள் கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.

Vijay

முதல்வர் விஜய் அறிவிப்பு

அதன்படி கடந்த 12ம் தேதி விசிக எம்​எல்ஏ ஜோதி​மணி சபாநாயகரிடம் ஒரு கோரிக்கை விடுத்து இருந்தார். அதாவது எம்​எல்​ஏக்​கள் மக்​கள் பணி செய்ய வாக​னம் தேவை என குறிப்பிட்டிருந்தார். மேலும், உதவி​யாளரும் தேவை என கோரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில் தான் முதல்வர் விஜய் இன்று விதி எண் 110 கீழ் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதாவது அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். தொகுதி சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக கார் வழங்கப்படும் என்றும் அதற்கு வாகனப்படியாக தனியாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். இது தவிர எம்எல்ஏக்கள் உதவியாளர் ஒருவரை நியமித்து கொள்ளலாம் என்றும் அதற்கு அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். முதல்வரின் இந்த அறிவிப்பை பல்வேறு சட்டசபை உறுப்பினர்களும் வரவேற்று பேசினர்.

நெட்டிசன்கள்

இருப்பினும், நெட்டிசன்கள் பலரும் முதல்வரின் இந்த அறிவிப்பை விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டின் நிதிநிலை மோசமாக இருப்பதாகவும் நிதி பற்றாக்குறை நிலவுவதாகவும் முதல்வர் விஜய் கூறியிருந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள், இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வரும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், தேர்தல் சமயத்தில் முதல்வர் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் பேசியதையும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஊரான் வீட்டு நெய்

அதில் முதல்வர் விஜய், "தென்மாவட்டத்தில் உங்க அப்பாவுக்கு வெண்கல சிலை வைக்க முயற்சி செய்தீர்கள். அதை உச்ச நீதிமன்றம் தடுத்துவிட்டது. மக்களின் பணத்தில் யாருக்கு புகழ் பாட பார்க்கிறீர்கள் என நீதிமன்றம் கேட்டது. அப்படி கேட்க என்ன அர்த்தம் தெரியுமா? ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க என்று அர்த்தம்..

மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு ஏதாவது பிரச்சனை என கேட்டால் நிதிச்சுமை, நிதிச்சுமை என்பதையே பதிலாக வைத்துள்ளனர். ஆனால், சிலை வைக்க மட்டும் எங்கிருந்து சார் காசு வருது. முதலில் மக்களுக்கு சோற்றை போட வழியை பாருங்கள். அதன் பிறகு சிலையை வைப்பது பற்றி எல்லாம் யோசிக்கலாம். கேஸ் சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் தருவதாக சொன்னீர்களே அது என்னாச்சு. கரும்புக்கு ஆதார விலையா 4000 ரூபாய் தரேனு சொன்னீங்களே என்ன ஆச்சு..

சரமாரி கேள்வி

ரொம்ப நாள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை தருவோம் என சொன்னீர்களே.. அது என்னாச்சு! இதெல்லாம் வெறும் சாம்பிள் தான்.. இதைவிட ஹைலைட் ஒன்று இருக்கிறது. மாநில அரசால் முடியவே முடியாதுன்னு தெரிந்தும் நாங்கள் வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என்று சொன்னீர்களே அது என்னாச்சு.. ஆஹா எவ்வளவு பெரிய ஒரு மோசடி இது!

கேட்டால் நாங்கதான் முன்மாதிரி ஆட்சின்னு சொல்லுவாங்க.. ஆனால், இது முன்மாதிரி ஆட்சி இல்லை.. மோசடி ஆட்சி.. மோசமானவர்களே முக்கியமானவங்க என சொல்வார்களே.. அதுபோல மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த திமுக ஆட்சி!" என்று பேசியிருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்தும் இதற்கு ஏன் மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+