குட் நியூஸ் மக்களே.. தமிழ்நாட்டில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு.. சென்னையின் நிலை என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சிறிது குறைந்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே வேளையில் உயிரிழப்பு நேற்றை விட அதிகரித்துள்ளது. சென்னையில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கோவையிலும் பாதிப்பு மிக அதிமாக இறக்கிறது.

சற்று குறைந்த கொரோனா
ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்து விட்டது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட சற்று குறைவாகும். அதாவது நேற்று 30,744 பேருக்கு பாதிப்பு இருந்தது. கொரோனா மொத்த பாதிப்பு 31,33,990 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையின் நிலை என்ன?
சென்னையில் அதிகபட்சமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து ஆறுதலை ஏற்படுத்தினாலும், உயிரிழப்பு அதிமாகி வருகிறது. சென்னையை தவிர செங்கல்பட்டில் 6 பேர் இறந்தனர். கடலூரில் 3 பேரும், கோவையில் 2 பேரும் இறந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 37,218 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 24,283 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 28,95,818 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.

ஆக்டிவ் கேஸ்கள் 2 லட்சம்
2,00,954 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,49,638 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,95,99,884 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 6383 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

கோவையில் ஆதிக்கம்
செங்கல்பட்டில் 1841 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3912 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 560 பேருக்கும், மதுரையில் 622 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1248 பேருக்கும், திருவள்ளூரில் 751 பேருக்கும், திருச்சியில் 757 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1507 பேருக்கும், ஈரோட்டில் 1220 பேருக்கும், சேலத்தில் 1074 பேருக்கும், நாமக்கல்லில் 695 பேருக்கும், தஞ்சாவூரில் 1123 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் 198 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1010 பேருக்கும், தூத்துக்குடியில் 428 பேருக்கும், நெல்லையில் 608 பேருக்கும், விருதுநகரில் 524 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications