தமிழ்நாடு உருவான நாள்.. போராட்டங்களை கடந்து நிலைத்த பெயர்! முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு சென்னை மாநிலமாக உருவாக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சென்னை மாகாணம் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு நாள் உருவான இந்த நன்னாளில் அனைவருக்கும் தமிழ்நாடு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார்.

சுதந்திரத்திற்கு முன்னதாக 1938ஆம் ஆண்டு சென்னையில் ஒரு மிகப்பெரிய இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. பெரியார், மறைமலை அடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் தமிழ்நாடு தமிழருக்கு என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.

Tamil Nadu Day Celebrated Today

அப்போது சிலம்பு செல்வர் என அழைக்கப்பட்ட மா.பொ.சி தமிழ் மாநிலம் வேண்டும் என தொடர்ந்து மாநாடுகள் நடத்தி வந்தார்/ 1948 இல் எஸ்கே தார் தலைமையில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தொடர்பான குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு மொழி வாரி மாநிலம் அவசியம் இல்லை, நிர்வாக வசதிக்கேற்ப உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது. அப்போது ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல தலைவர்களும் அதையே வலியுறுத்தினர். ஆனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை உருவாக்க வேண்டும் என மொழி வாரி போராட்டங்கள் தொடங்கியது.

ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமலு என்பவர் உண்ணாவிரதம் தொடங்கி மரணம் அடைந்தார். தெலுங்கு மக்கள் கோபத்தில் கொந்தளித்த நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் 1953ல் தனி ஆந்திரா உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது.

அதன்படி 1956 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி மாநில மறுசீரமைப்பு நடைபெற்றது. அப்போது மெட்ராஸ் மாகாணம் உருவாக்கப்பட்டு திருவராங்கூர் கொச்சி பகுதியில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் ஆகியவை தமிழ்நாட்டோடு சேர்க்கப்பட்டு, மலபார் கேரளாவுடன் இணைக்கப்பட்டது. கன்னட மொழி பேசும் பகுதிகள் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.

அப்போது தமிழ்நாட்டுக்கு மெட்ராஸ் ஸ்டேட் என பெயர் வைக்கப்பட்டது. 1956 ஜூலை மாதம் தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி 76 நாட்களுக்கு பிறகு உயரிழந்தார். தொடர்ந்து 1957 இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு பலமுறை தமிழ்நாடு என பெயர் வைக்கும் தீர்மானங்கள் தோல்வியில் முடிந்தன.

பின்னர் 1968 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. இப்படி பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் தமிழ்நாடு என்ற பெயர் நிலைத்திருக்கிறது இன்று வரை.. அதே நேரத்தில் ஜனவரி 14 என தேதி தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாள் தான் தமிழ்நாடு நாள் என திராவிட இயக்கத்தினர் சொல்லி வரும் நிலையில், மாநிலம் உருவான நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக வெற்றிக்கழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகளை முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்," மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+