தமிழ்நாடு நாள் சர்ச்சை.. அதுவும் முக்கியம், இதுவும் முக்கியம்தான்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டது 1956 நவம்பர் 1 என்பதே வரலாற்று உண்மை, 1967ம் ஆண்டு "தமிழ்நாடு" என பெயர் சூட்டப்பட்டதும் முக்கியத்துவம் உடையதே என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்று 1938ஆம் ஆண்டிலிருந்து போராடியது இந்திய பொதுவுடைமை இயக்கம். இந்திய விடுதலைக்குப் பிறகும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றது.

 மொழிவாரி மாநிலங்கள்

மொழிவாரி மாநிலங்கள்

அரசின் அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, உயிர்த்தியாகம் என்று நீடித்தப் போராட்டங்களுக்கு பிறகே மத்திய காங்கிரஸ் அரசாங்கம் மொழிவாரி மாநிலங்கள் என்ற கோரிக்கையை ஏற்று 1956 நவம்பர் 1 ந் தேதி சென்னை மாநிலம், கர்நாடக ஏகிகரண சளுவளி, நவ கேரளா, விசாலாந்திரா, சம்யுத்க மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

 தமிழ் மாநிலம்

தமிழ் மாநிலம்

தமிழ்மொழி பேசும் மக்கள் வாழக்கூடிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாகத்தான் திருத்தணி வட்டமும், கன்னியாகுமரி மாவட்டமும் தமிழகத்தின் பகுதியாக இணைக்கப்பட்டு தற்போதுள்ள "தமிழ் மாநிலம்" உருவானதும் இதே நாளில் தான். இந்த கால கட்டத்தில் திமுக திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து போராடிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 தமிழ்நாடு பெயர் வந்தது

தமிழ்நாடு பெயர் வந்தது

உருவாக்கப்பட்ட தமிழ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட வேண்டுமென பல கட்ட போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தமிழ் மொழி அடிப்படையிலான மாநிலம் உருவான போதும், அதற்கு சென்னை மாகாணம் என்றே பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வலுவாக குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்றத்தில் 1961ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென தோழர் பி.ராமமூர்த்தி சட்டதிருத்த மசோதாவை முதன்முதலில் கொண்டு வந்தார். இம்மசோதா விவாதத்திற்கு வரும் நேரத்தில், தோழர் பி.ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் இம்மசோதாவை முன்மொழிந்து மேற்கு வங்கத்தைச் சார்ந்த புபேஷ்குப்தா நாடாளுமன்றத்தில் வாதாடினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தார்.

 சங்கரலிங்கனார் உண்ணாவிரதம்

சங்கரலிங்கனார் உண்ணாவிரதம்

இதே கோரிக்கையை வலியுறுத்தி சங்கரலிங்கனார் விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டார். இறுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனார் 76ஆவது நாள் மரணமடைந்தார். தனது மரணத்திற்கு பின் உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் அவரது உடலை, கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் கே.பி.ஜானகி அம்மாள் அவர்களும், கே.டி.கே.தங்கமணியும் பெற்று அடக்கம் செய்தனர். இறுதியில் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகே,1967ம் ஆண்டு ஜூலை 18ந் தேதி "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 இரு வரலாற்று நிகழ்வுகள்

இரு வரலாற்று நிகழ்வுகள்

எனவே, மேற்கண்ட இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளை கொண்டாடுவதே பொருத்தமானதாக இருக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 1967 ஜூலை 18ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய நாள்தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்படும் என்று தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் நவம்பர் 1ம் தேதியைதான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+