9ல் 7 தொகுதிகளில் கிளீன் ஸ்வீப்.. கொங்கு இனிமேல் திமுக கோட்டை.. அதிமுக, பாஜக அவுட்.. தந்தி கணிப்பு
சென்னை: கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் திமுக - அதிமுக - பாஜக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் இங்கே எந்த கட்சி வெற்றிபெறும் என்று தந்தி டிவி கணிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் 33 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கு 0 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் எனவும் தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு அடுத்தப்படியாக பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் அது நிச்சயம் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.'

இதில் கொங்கு மண்டலத்தில் முடிவுகள் பின்வருமாறு இருக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை: கோவையில் திமுக - அதிமுக - பாஜக இடையே கடும் இழுபறி நிலவுவதாக தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. கோவையில் திமுக கணபதி ராஜ்குமார் 31.5% வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. கோவையில் அதிமுக சிங்கை ஜி. ராமச்சந்திரன் 31 % வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. பாஜக அண்ணாமலை கோவையில் 30.5% வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் திமுக - அதிமுக - பாஜக இடையே கடும் போட்டியில் திமுக கூட்டணியில் உள்ளே சிபிஐக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. அங்கே சிபிஐ சுப்பராயன் 37% வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. அங்கே அதிமுக அருணாச்சலம் 32 % வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. பாஜக ஏபி முருகானந்தம் 23% வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது.
ஈரோடு: ஈரோட்டில் திமுக - அதிமுக - பாஜக இடையே கடும் போட்டியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. அங்கே திமுக பிரகாஷ் 43% வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. அங்கே அதிமுக ஆற்றல் அசோக் 35 % வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. பாஜகவின் தமிழ் மாநில காங்கிரஸ் விஜயகுமார் 11% வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. இங்கே திமுக வெற்றி பெறுகிறது.
தர்மபுரி : திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு 34 சதவீத வாக்குகளும் பாமக வேட்பாளர் சவுமியாவுக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் அதிமுகவுக்கு 26 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கணித்துள்ளது. இங்கே கடும் இழுபறி உள்ளது.
சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில் திமுகவிற்கு வெற்றிக்கான வாய்ப்பு 41 சதவிகிதம் உள்ளது. அதிமுகவிற்கு 36 சதவிகிதம் வாய்ப்புள்ளது. பாமகவிற்கு 13 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் லோக்சபா தொகுதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரை உள்ளடக்கியது பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. திமுகவில் செல்வ கணபதியும், அதிமுகவில் விக்னேஷும், பாமகவில் அண்ணாதுரையும், நாம் தமிழர் கட்சி சார்பாக மனோஜ்குமாரும் களத்தில் உள்ளனர். இங்கே திமுக வெற்றி பெறுகிறது.
நீலகிரி: நீலகிரி தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் ஆ ராசா 36 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வன் 31 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் 24 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணிப்பில் கூறியுள்ளது. இங்கே திமுக வெற்றி பெறுகிறது.
நாமக்கல்: நாமக்கல் தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் கொமதேக மாதேஸ்வரன் 43 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்மணி 34 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் ராமலிங்கம் 12 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணிப்பில் கூறியுள்ளது. இங்கே திமுக வெற்றி பெறுகிறது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் காங்கிரஸ் கோபிநாத் 40 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயபிரகாஷ் 36 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் நரசிம்மன் 11 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணிப்பில் கூறியுள்ளது. இங்கே திமுக வெற்றி பெறுகிறது.
கரூர்: கரூர் தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் காங்கிரஸ் ஜோதி 36 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் தங்கவேல் 32 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் 23 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணிப்பில் கூறியுள்ளது. இங்கே திமுக வெற்றி பெறுகிறது.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா












Click it and Unblock the Notifications