Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முழுஊரடங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் அமலானது - எவை எவை இயங்கும் - யாருக்கு அனுமதி

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும் என அறிவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மருந்து கடைகள், வேளாண் இடு பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்துக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 முதல் மே 31ஆம் தேதி இரவு வரைக்கும் இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்து வாகனங்களை பறி கொடுத்து விட வேண்டாம் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Recommended Video

    தமிழ்நாட்டில் Full Lockdown அமலானது! எவை எவை இயங்கும்? | OneIndia Tamil

    கடந்த 15 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில்
    தமிழகத்தில் மேலும் 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 18,42,344 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 25,196 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 15,27,733 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 20,468 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 240 பேரும், தனியார் மருத்துவமனையில் 182 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    கடும் கட்டுப்பாடுகள்

    கடும் கட்டுப்பாடுகள்

    சென்னையில் 5,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 4,78,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே உள்ளதால் ஒரு வார காலத்திற்கு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ள முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குடிநீர், பால் விநியோகம்

    குடிநீர், பால் விநியோகம்

    மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கும். பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம் செய்யலாம். பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.

    உணவு விநியோகம்

    உணவு விநியோகம்

    உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (E-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும். மின்னணு சேவை (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.

    சரக்கு வாகனங்கள்

    சரக்கு வாகனங்கள்

    பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும். ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
    வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

    ஒர்க் ஃப்ரம் ஹோம்

    ஒர்க் ஃப்ரம் ஹோம்

    தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும். தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்

    மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்

    தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
    இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மே 25ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை.

    அரசு அறிவுறுத்தல்

    அரசு அறிவுறுத்தல்

    மே 25 முதல் தொழிற்சாலைகள் இ-பதிவு செய்துள்ள வாகனங்களில் மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை அழைத்து வர 4 சக்கர வாகனங்களை ஏற்படுத்துக் கொள்ளவும் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

    காலை 7 மணி முதல் 1 மணி வரை

    காலை 7 மணி முதல் 1 மணி வரை

    தமிழகத்தில் காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 044-22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும். காய்கறி மற்றும் பழங்கள் அந்தந்த பகுதிகளின் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.

    வாகனங்களில் விற்பனை

    வாகனங்களில் விற்பனை

    காய்கறி மற்றும் பழம் விநியோகத்தை கண்காணிக்க தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலமும், சென்னையில் 1,610 வாகனங்கள் மூலமும் முழு ஊரடங்கு காலத்தில் காய்கறிகள், பழங்கள் விநியோகிப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+