Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு ஊழியர்களுக்கு வருது குட்நியூஸ்..அதைவிடுங்க, இதெல்லாம் எங்கே காணோமே? கோட்டைக்கு போன கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கும் என்ற தகவல் வெளியாகிவரும் நிலையில், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்...

Tamil nadu government employees DA hike and what are the demands of the TN Govt employees union

நெருக்கடிகள்: ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருக்கிறது.

எனவேதான், மத்திய மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்... இதில், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. 4 சதவீதம் வரைக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.

அப்படி 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால், தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 25,500 என்றால், ஊழியர்களுக்கு 10,610 வரைக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவராத நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதிய திட்டம்: அதேசமயம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.. குறிப்பாக, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை, இதில் இழப்புகள் அதிகம் என்பதால், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.

காலி பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். திமுக வாக்குறுதியில் சொல்லியிருந்த விஷயங்களை நிறைவேற்றவில்லை என்று ஆதங்கம் வெடித்து கிளம்பியிருக்கிறது. அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் லட்சுமி நாராயணன் இதுகுறித்து சொன்னதாவது:

நிவாரண நிதி: "அதிமுக அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டு இறந்த மக்கள் நலப்பணியாளர் வாரிசுக்கு அரசு வேலையும், குடும்ப நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும், கதர் கிராம தொழில் வாரிய தொழிலாளர்கள், ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது அதிமுக அரசால் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல, அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு புதிய நியமனம் நடக்கும். 2ம் நிலை போலீசாருக்கு 7 ஆண்டுகளில், முதல்நிலை போலீசாருக்கு 10 ஆண்டுகளில், எஸ்எஸ்ஐ-களுக்கு பதவி உயர்வு 20 ஆண்டுகளில் வழங்கப்படும், தூய்மை பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

கோரிக்கை: ஆனால் முதல்வர் ஸ்டாலின் நுாறு சதவீதம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக சொல்கிறார்.. அரசு ஊழியர்களுக்கான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+