சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட.. 4 மாவட்டங்களுக்கு ஜாக்பாட்! வீடு தேடி வரும் ரூ.10000.. செம அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்டங்களில் சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம்கள் இன்று தொடங்கப்பட உள்ளது.
குறைந்த வட்டியில் அதிகபட்சமாக ₹10,000 வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தொழில்களை இழந்த பலர் மீண்டு வருவதற்கு வசதியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு 6 மாவட்டங்களில் வரும் ரூ.6000 வெள்ள நிவாரண தொகையை வழங்கி வருகிறது. பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் 17, 18 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயல் வெள்ளம்: வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த மாதம் தொடக்கத்தில் முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.
இந்த புயல் காரணமாக சென்னையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் பலத்த சேதமும் ஏற்பட்டது.
தென் மாவட்ட வெள்ளம்: இதை தொடர்ந்து சில நாட்களில் தென் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வார தொடக்கத்தில் தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் இயல்பை விட 68%மும், திருநெல்வேலியில் 135%மும், கன்னியாகுமரியில் 103%மும், தென்காசியில் 80%மும் கூடுதலாக பதிவாகியுள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கின.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
நிவாரணம் அறிவிப்பு: தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்
அதேபோல் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மிக்ஜாம்: இந்த நிலையில் மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம்கள் இன்று தொடங்கப்பட உள்ளது.
குறைந்த வட்டியில் அதிகபட்சமாக ₹10,000 வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தொழில்களை இழந்த பலர் மீண்டு வருவதற்கு வசதியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் தென் மாவட்டங்களுக்கும் இதே திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications