தமிழக அரசுக்கு கிடைத்த கவுரவம்! 'லீடர்' விருது கொடுத்து பெருமைப் படுத்திய மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தொழில் சூழமைவிற்கான 'லீடர்' விருதை தமிழக அரசுக்கு வழங்கி கவுரவித்துள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என பாஜகவினர் ஒரு பக்கம் விமர்சித்து வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கமே தமிழக அரசின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதை வழங்கியிருக்கிறது.

இது தொடர்பான விவரம் வருமாறு;

 லீடர் விருது

லீடர் விருது

டெல்லியில் மத்திய அரசின் தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வணிகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத்தில் புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் நோக்கில் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்தற்காக தமிழ்நாட்டிற்கு லீடர் விருது வழங்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் புத்தொழில் சூழமைவில் வளர்ந்து வரும் மாநிலம் என்ற நிலையில் இருந்து தற்போது "லீடர்" நிலைக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது.

முதல்வர் வாழ்த்து

முதல்வர் வாழ்த்து

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவிற்கான "லீடர்" விருதை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் தாமோ அன்பரசனும் உயர் அதிகாரிகளும் வாழ்த்துப் பெற்றனர். இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தற்போது இந்த விருதை பெறுவதற்காக உழைத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

பாஜகவினர் விமர்சனம்

பாஜகவினர் விமர்சனம்

தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 'லீடர்' விருதானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என பாஜகவினர் ஒரு பக்கம் விமர்சித்து வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கமே தமிழக அரசின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதை வழங்கியிருக்கிறது.

புத்தொழில்

புத்தொழில்

புத்தொழில் புத்தாக்க முயற்சியில் தேசியளவில் தமிழகம் முதலிடத்தை பிடிப்பதோடு அதனை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+