ஸ்டாலினின் இன்னொரு தீபாவளி பரிசு.. 2000+1000 மொத்தமாய் குடும்பத்துக்கு ரூ.3000! யாருக்கு கிடைக்கும்?
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளை கவனிக்கும் பெற்றோருக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் நலத்திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குதல், 1 ஆம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்காக மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.
இதுதவிர, பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் ரூ.2,000/- மாதந்தோறும் மாற்றுத்திறனாளி வங்கி கணக்குக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளை கவனித்து வரும் மாற்றுத்திறனாளி பெற்றோருக்கு கூடுதல் உதவித்தொகையாக ரூ.1,000/- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு
திருமண உதவி திட்டத்தின் மூலம் ரூ.25,000/-, 8 கிராம் தங்கமும் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தங்களது தினசரி தேவைகள் பூர்த்தி செய்திட உதவி உபகரணங்களாக 3 சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, செயற்கைக்கால் காளிபார் ஊன்றுகோல், பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடி, மடக்கு குச்சி, கல்வி பயில்பவர்களுக்கு பிரெய்லி ரீடர் வாசிக்கும் கருவி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள்
கைக்கடிகாரம், எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப் பெருக்கி, காதலி கருவி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், சுய தொழில் புரிவோர், பணிபுரிவோர், கல்வி பயில்பவர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள் தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.
கல்வி உதவித்தொகை
மேலும் சட்டப்படிப்பு பயின்று வருபவர்களுக்கு ரூ.50,000/-, மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகள் கல்வி பயில்பவர்களுக்கு நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் குரல்கள் ஒலிப்பதற்காக உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர் பதவி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள்
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் களப்பணியாளர்கள் கொண்டு மாற்றுத்திறனாளிகள் எவரும் விடுபடா வண்ணம் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே அரசு சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் அரசின் நலத்திட்டங்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications