வேலுமணிக்கு எதிரான டெண்டர் ஊழல் வழக்கு.. தமிழக அரசு அதிரடி.. விசாரணை நடத்தப்படும் என்று அறிவிப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அப்போதைய உள்ளாட்சித்துறைஅமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை முடிக்க கோரிய அதிமுக அரசு
டெண்டர் விடப்பட்டதில் வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக வேலுமணிக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுகொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அதிமுக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரர் எதிர்ப்பு
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது., ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது

நேரடி விசாரணை
இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் வழக்கு விசாரணையை நேரடி விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும், தற்போது ஆட்சி மாறி உள்ளதாகவும் எனவே சூழலும் மாறிவிட்டது எனவே வழக்கு விசாரணை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மீண்டும் வந்த விசாரணை
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டாலும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், எனவே வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த முறை நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் மீண்டும் இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு திட்டவட்டம்
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, கணக்கு தணிக்கை அறிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதால் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு விசாரணைக்கு பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய நீதிமன்றம்
அப்போது நீதிபதிகள் முழுமையாக விசாரணை நடத்தி முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி வழக்கை ஆகஸ்ட் 2 வது வாரத்துக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக அரசு தள்ளுபடி செய்ய கோரிய வழக்கில், நடவடிக்கை எடுக்கப்போவதாக திமுக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications