சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாட்டரி போல ஆன்லைன் ரம்மியையும் தடை செய்யுங்கள்..அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

23 பேர் செத்துட்டாங்க! இதைவிடவா காரணம் தேவை? ஆன்லைன் ரம்மியை ஒழிங்க! வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமி 23 பேர் செத்துட்டாங்க! இதைவிடவா காரணம் தேவை? ஆன்லைன் ரம்மியை ஒழிங்க! வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமி

விஜயகாந்த் அறிக்கை

விஜயகாந்த் அறிக்கை

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீப காலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நகை பணத்தை இழந்த மணலி புதுநகரை சேர்ந்த பவானி என்ற பெண் உள்பட பல பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். வேலை வாய்ப்பு இல்லாததாலும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் இன்றைய இளைஞர்களும், பெண்களும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர்.

அரசின் கடமை

அரசின் கடமை

எனவே இன்றைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டியது தமிழக அரசின் கடமை. மேலும், பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக இருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

குழுவிற்கு வரவேற்பு

குழுவிற்கு வரவேற்பு

இதற்கிடையே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருப்பதை தே.மு.தி.க. சார்பில் வரவேற்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMDK leader Vijayakanth has welcomed the Chief Minister's announcement that a law will be enacted to ban online rummy. He urged the Tamil Nadu government to immediately ban online rummy games, just as it has banned the sale of lottery tickets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X