சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்டுங்கள்.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை : சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும், இயற்கை வளங்களை பாதுக்காப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளிடமிருந்து கிரானைட் வளங்களை பாதுகாக்க கோரி ஜி.சரவணம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தனிப்பட்ட விரோதம் காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனிப்பட்ட விரோதம் இருந்தாலும், ஆக்கிரமிக்கப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதும் அரசு நிலமாக இருப்பதால் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.
அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடைபெறும் கிரானைட் கொள்ளை எங்கு நடைபெற்றாலும் அதற்கு முடிவுகட்ட வேண்டும் எனவும் கிரானைட் வளங்களை பாதுக்காப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.
மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications