அதிமுக மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி வழக்கு- ஆளுநர் ரவி அனுமதி மறுப்பு! 31 பேர் விடுதலைக்கு ஒப்புதல்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி மறுத்துவிட்டார். கேசி வீரமணி விவகாரத்தில் கூடுதல் ஆ வணங்களைக் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி. திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா, கேசி வீரமணி உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது. இந்த கோப்புகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருந்தார்.

தமிழ்நாடு அரசு, ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் இந்த விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனையடுத்து அண்மையில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா ஆகியோருக்கு எதிரான வழக்கில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி இருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி மீதான கோப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி மீது வழக்கு தொடருவதற்கான கோப்புகளில் ஆளுநர் ரவி அனுமதி மறுத்து, கூடுதல் விவரங்களைக் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கோப்புகளை திருப்பி அனுப்பி வைத்தார்.
மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதேபோல நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 71 பேரில் 31 பேர் விடுதலைக்கு மட்டும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications